க.யாஸ்மின் சிராஜூதீன்
தமிழே அமுதே பைந்தமிழ் மொழியே
அமிழ்தம் எனும் பொருளும் உனக்கே
சங்க இலக்கியங்கள் கூறும் உன்சிறப்பே
கல்வெட்டுகளில் பதிந்த பழமையான மொழியே
திருக்குறளின் வார்த்தையாய்
மிளிரும் உயிர்நாடியே
தமிழின் ஒவ்வொரு எழுத்தும் ஒவியமாய்
மழலைகள் பலகையில் செதுக்கும் காவியமாய்
நாவினில் சுரக்கும் தேனின் சுவையாய்
கொஞ்சும் தமிழில் பிள்ளைமொழியாய்
அகலத்தில் தொடங்கி
சாதனைச்சிகரமாய் உயர்ந்து

மடைதிறந்த வெள்ளமாய் புலவர்களின் நாவில் சரளமாய்
காவியமும் கவிபாடும் சங்கஇலக்கியங்களும்
கதைகூறும்
தாலாட்டிலே கேட்ட அன்னை மொழி
பாட்டியின் கதையிலே ரசித்த
வீரமொழி
உயிரில் கலந்து உணர்வில் வளர்ந்து
செம்மொழியாய் செங்கதிர்
குன்றின் மேலிட்டவிளக்காய்
தமிழே அமுதே மொழிகளில் முதலே
தமிழர்களின் மரபே அடையாளமே அன்னைமொழியே
உயிரினும் மேலான சித்தாந்தங்கள் மொழியே தமிழே அமுதே!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}