ரீல்ஸ் நமக்கு தேவையா?

Oct 08, 2026,06:13 PM IST

- கவிஞர் க.யாஸ்மின் சிராஜுதீன்


சமூக ஊடகங்கள் ரீல்ஸ் மயமே 

குறுகியகால காணொலியே 


பாடலும்  இசையும் கொண்ட  காணொலியே 

நகைச்சுவை காணொலியே 


உலக தகவல்கள்  கல்விதொடர்பான காணொலியே 

நடன காணொலியே 


இயற்கை மற்றும்  பயணம்   கொண்ட காணொலியே

பொருட்கள் அல்லது விளம்பர காணொலியே 


இன்ஸ்டாகிராம் 

பேஸ்புக் ரீல்சே

யூடியூப் சார்ட்ஸ்சே 


ரீல்ஸ் மோகத்தின் பிறப்பிடமே 

சிறிய நேரத்தில் பார்க்கக்கூடியதே




வேகமாக அடுத்தடுத்து வரும் குறுகிய காணொலியே

நவீன உலகில் கைப்பேசி 

நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமே 


ரீல்ஸ் காணொலியே


குழந்தைகளையும் பெரியவர்களையும்  கவர்ந்துகொண்ட

நவீன மாயாஜாலமே  


பொழுதுபோக்கிற்காக பார்த்த ரீல்ஸே

மோகமாகவே மாறிவிட்டதே


ரீல்ஸ் மூலம் பயன்களும் உள்ளனவே

நன்மையும் தீமையும் அனைத்திலும் உண்டே 


கல்வி, சமையல், கலை, உடற்பயிற்சியே

தொழில்நுட்பம், இயற்கை, பயணம் பற்றியே


சிறிய காணொலிகளால்  எளிதாக அறிந்துகொள்ள முடிகிறதே


திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தவும் 

ரீல்ஸ் ஒரு வாய்ப்பாக அமைகிறதே


அளவுக்கு மிஞ்சினால் 

ரீல்ஸ் பார்ப்பது நேரத்தை வீணாக்குமே


இன்னும் ஒன்று பார்ப்போம் என தொடங்கியே

நீண்ட நேரம் தொடர்ந்து பார்ப்பது நம்நேரத்தை வீணாக்குமே 


நம் படிப்பு, வேலை, தூக்கம்  குடும்பம் என பாதிப்படையுமே


ரீல்ஸ் பொழுதுபோக்கிற்கான ஒரு கருவியே

வாழ்க்கையை நடத்துவதற்கான கருவி அல்லவே


தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த வேண்டுமே

தொழில்நுட்பம் நம்மை கட்டுப்படுத்தக் கூடாதே 


கைப்பேசியைத் திறப்பதற்கு முன்பாகவே 

எதற்காகப் பயன்படுத்துகிறோம் என 

நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டுமே


சில நொடிகளின் காட்சிக்காக

பல மணிநேரங்களைத் தொலைக்கிறோமே


விரலை நகர்த்தும் ஒவ்வொரு முறையும்

வாழ்க்கையின் ஒரு நொடி நகர்கிறதே


அடுத்த ரீல்ஸ் என்னவென்று

தேடும் ஆர்வத்திலே 


நம் வாழ்க்கையின் அடுத்த பக்கத்தை

மறந்து விடுகிறோமே


பிறர் வாழ்க்கையைப் பார்த்துப் பார்த்து

நம் வாழ்க்கையை ஒப்பிடுகிறோமே


திரையில் தெரியும் புன்னகையில்

எத்தனை உண்மைகள் மறைந்துள்ளன

என்பதை அறியாமலே


ரீல்ஸ் பொழுதுபோக்காக இருக்கட்டுமே

நம் வாழ்க்கையாக மாறிவிடக் கூடாதே


திரையைப் பார்ப்பதற்கு முன்

நம் கனவுகளைப் பார்ப்போமே


விரலை ஸ்க்ரோல் செய்வதற்கு முன்

நம் இலக்கை நோக்கி ஒரு அடியாவது எடுத்து வைப்போமே


ரீல்ஸ் முடிவில்லாமல் ஓடுமே

வாழ்க்கை அப்படியல்லவே


நேரம் திரும்பி வராதே

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோமே


ரீல்ஸில் தொலைந்து போகாமலே

நேரம் என்பது பொக்கிசமே 


ரீல்ஸை அளவோடு ரசிப்போமே

நம் இலக்குகளுக்கும் கனவுகளுக்கும் அதிக நேரம் ஒதுக்குவோமே


“திரையில் சில நொடிகளை ரசிப்போமே

வாழ்க்கையின் பொன்னான நொடிகளைத் தொலைக்காமல் வாழ்வோமே

தேவைக்கு மட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோமே 


வீட்டையும் நாட்டையும் 

வளப்படுத்துவோமே


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்