சென்னை: சென்னை தங்கம் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.85 குறைந்து சவரன் 53,560க்கு விற்கப்படுகிறது.
கடந்த 20ம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்திருந்த தங்கம், 21ம் தேதி சவரனுக்கு ரூ.640 உயர்ந்திருந்தது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று மட்டும் சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி மழையில் நனைய வைத்துள்ளது தங்கம்.
தமிழ்நாட்டு மக்கள் தங்கத்தை மிக முக்கியமான உலோகமாக கருதிவருகின்றனர். அனைத்து விழாக்களிலும் தங்கம் அத்தியாவசியமான பொருளாக பார்க்கப்படும் அளவிற்கு மக்கள் மத்தியில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. மதிப்பு உயர்வாக கருதப்படுவதாலோ என்னவோ தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தங்கத்தின் மீதான மோகம் தமிழ்நாட்டு மக்களிடையே குறைந்த பாடு இல்லை.
ஒரு புரம் இப்படி என்றால் மற்றொரு புறமோ உலக அளவில் உள்ள மக்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட தங்கம். அதன்பின்னர் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக உயர்ந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் மகிழ்ச்சி அடைந்த நகைப்பிரியர்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,695 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 85 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.680 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,560 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,304 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,432 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.744 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.96.50க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 772 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலைரூ.96,500க்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிலோவிற்கு ரூ.2000 குறைவாகும்.
தமிழகத்திற்கு இப்போதே தேர்தல் பொறுப்பாளரை நியமித்த பாஜக.. மாஸ்டர் பிளான் என்னவோ!
போர்க்கொடி உயர்த்தும் கூட்டணி கட்சிகள்.. பொறுமை காக்கும் திமுக.. காத்திருக்கும் அதிமுக!
திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு... அக்டோபர் 30ல் தீர்ப்பு: குடும்ப நல நீதிமன்றம்
ஸ்டிராங் ஆன எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்பட்டாரா கே.ஏ.செங்கோட்டையன்.. என்ன திட்டம்?
திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கில் கேப்டன்!
5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
{{comments.comment}}