சென்னை: தங்கம் விலை, நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்த இன்று சவரனுக்கு ரூ.160 சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6710க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.53,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்த தங்கம் விலை இன்று குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்கமாகவே தங்கம் விலை நிலையற்ற தன்மையில் இருந்து வருகிறது. என்று ஏற்றம் காணும், என்று குறையும் என்று தெரியாத அளவிற்கு தங்கம் விலை இருந்து வருகிறது. இதனால், மக்கள் தினம் தினம் தங்க விலையை உற்று காவனித்து வருகின்றனர்.
குறிப்பாக, வைகாசியில் விஷேசங்கள் வைத்திருப்பவர்கள் விலை நிலவரத்தை அதிகளவில் உற்று கவனித்து வருகின்றனர். நகை வாங்க காத்திறுப்பவர்களுக்கு இன்று ஏற்ற விலையில், தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் வாங்க இதுவே சரியான நேரம். தங்கம் மட்டும் இன்றி வெள்ளியின் விலையும் இன்று குறைந்தே உள்ளது. அப்புறம் என்ன மக்களே இன்று நகைகடைகளை நோக்கி கிளம்பலாமே. அதற்கு முன்னர் இன்றைய விலை நிலைவரத்தை சற்று பார்த்து விட்டு செல்லலாம்...

சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,710 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,680 ரூபாயாக உள்ளது.1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,320 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,560 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
நேற்று குறைந்திருந்த வெள்ளியின் விலையும் இன்றும் குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 2 ரூபாய் குறைந்து ரூ.98க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 784 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 இருந்த விலை இன்று ரூ.98,000க்கு விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.2,000 குறைந்துள்ளது.
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}