சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை இன்று உயரத் தொடங்கியுள்ளது.
தீபாவளி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தங்கம் விலை தாறுமாறாக ஏறும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சவரனுக்கு ரூ. 72 அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை ஏற ஆரம்பித்துள்ளது.
பண்டிகை நாட்களில் அனைத்து தரப்பு மக்களும் நகை வாங்குவது என்பது முக்கிய மான ஒன்றாகி உள்ளதால், நகையின் விலையும் உயர தொடங்கி விட்டது. இன்றை விலை என்ன தெரியுமா..!
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5695 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 9 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.72 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45560 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6213 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.49704 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.80 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 598.40 காசாக உள்ளது.
தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போறது கிடையாது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சரிவில் இருந்த தங்கம் தேவை அதிகரித்ததன் காரணத்தினால் உயரத்தொடங்கியுள்ளது.
ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து.. சென்னையில் நாளை பேரணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ
திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
No Live coverage: மீடியாக்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. அடக்கி வாசிங்க.. மத்திய அரசு கோரிக்கை
பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?
அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!
மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!
மதுரையில் கம்பீரமாக வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம்..உணர்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.. ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்!