சென்னை: இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.கிராமிற்கு ரூ.44 குறைந்து சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்கமாகவே தங்கம் விலை நிலையற்ற தன்மையில் இருந்து வருகிறது. என்று ஏற்றம் காணும், என்று குறையும் என்று தெரியாத அளவிற்கு தங்கம் விலை இருந்து வருகிறது. கடந்த 30ம் தேதி தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில், 31ம் தேதி எந்த மாற்றமும் இன்றி இருந்தது. அதன் பின்னர் ஜூன் 1ம் தேதி சவரனுக்கு ரூ.20 குறைந்திருந்த தங்கம், 2ம் தேதி எந்த மாற்றமும் இன்றி இருந்தது.
இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,666 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 44 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.352 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,328 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,272 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,176 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
கடந்த சனிக்கிழமை அன்று குறைந்திருந்த வெள்ளியின் விலையும் இன்றும் குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.70 காசுகள் குறைந்து ரூ.97.30க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 778.40 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 இருந்த விலை இன்று ரூ.97,300க்கு விற்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}