சென்னை: வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தங்கம். சென்னை தங்கம் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.20 குறைந்து சவரன் 53,440க்கு விற்கப்படுகிறது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
கடந்த 20ம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்திருந்த தங்கம், 21ம் தேதி சவரனுக்கு ரூ.640 உயர்ந்திருந்தது. அதே தங்கம் 22ம் தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் நனைய வைத்தது. அதன்பின்னர் நேற்று சற்று உயர்ந்திருந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தங்கத்தை மிக முக்கியமான உலோகமாக கருதிவருகின்றனர். அனைத்து விழாக்களிலும் தங்கம் அத்தியாவசியமான பொருளாக பார்க்கப்படும் அளவிற்கு மக்கள் மத்தியில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்க உற்பத்தியில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மொத்த தங்க உற்பத்தியில் 99 சதவீத தங்கம் கர்நாடகாவில் இருந்து தான் கிடைக்கின்றன. கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல்களும், ஹட்டி தங்க வயல்களும் கர்நாடகாவில் அமைந்துள்ள இரண்டு முக்கிய தங்கவயல்களாகும். இவற்றில் ஹட்டி தங்க வயல் பழமையானதாகும். இங்கு தான் அதிகளவில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. 2001 பிப்ரவரி 28 அன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியால் கோலார் தங்க வயல்கள் மூடப்பட்டன.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

இன்றைய தங்கத்தின் சென்னையின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,680 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்துள்ளது.ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.22 ஆக குறைந்துள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,440 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,288 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,304 ஆக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,68,000க்கு விற்கப்படுகிறது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.72,880 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,28,800க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.70 காசு்கள் குறைந்து ரூ.95.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 764 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.955 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,550 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.96,500க்கு விற்கப்படுகிறது.
ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!
பிரம்மாண்ட ப்ளூபேர்டை லாவகமாக கொண்டு சென்ற பாகுபலி!
{{comments.comment}}