சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.6,685க்கும், சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை வாரத்தின் இறுதி வர்த்தக தினமான நேற்று உயர்ந்த நிலையில், இன்றும் உயர்ந்துள்ளது. வைகாசி மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்பட்ட தங்கம் விலை, ஆனி மாதத்திலும் அதே நிலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்றும் உயர்ந்திருந்த தங்கம் இன்று உயர்ந்தது. இந்த விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். சீன மக்கள் பங்குச் சந்தையை நம்பாமல் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தான் தொடர்ந்து நகை விலை உயர்ந்து வருகிறது. இந்ந நிலை உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது. தங்கம் விலை உயர்ந்ததால் மீண்டும் நகை வாங்குபவர்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்...
சென்னையில் இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,685 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 19 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.152 ஆக உள்ளது.ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 ஆக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,480 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,293 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,344 ஆக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,68,500க்கு விற்கப்படுகிறது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.72,930 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,29,300க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.கடந்த 26ம் தேதி முதல் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையிலேயே இருந்து வருகிறது. இந்த விலை வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.94.50க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 756 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.945 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,450 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.94,500க்கு விற்கப்படுகிறது.
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
காலையில் தினமும் சாப்பிட சூப்பர் ரெசிப்பி.. குயினோவா.. அதாங்க சீமை திணைப் பொங்கல்!
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையில் தோல்வியுற்ற பாதுகாப்பு ஒத்திகை.. குண்டை கண்டுபிடிக்காத போலீஸார் சஸ்பெண்ட்
{{comments.comment}}