சென்னை: தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. நேற்று சரிவில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று மட்டும் ஒரு சவரன் ரூ.360 உயர்ந்துள்ளது.
நகை விலை உயர்வால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். சீன மக்கள் பங்குச் சந்தையை நம்பாமல் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தான் தொடர்ந்து நகை விலை உயர்ந்து வருகிறது. இந்ந நிலை உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது. தங்கம் விலை உயர்ந்ததால் மீண்டும் நகை வாங்குபவர்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6755 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 45 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.360 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,040 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7369 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,952 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை...

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று 2 ரூபாய் உயர்ந்து 1 கிராம் வெள்ளி விலை 88 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 704 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2000 உயர்ந்து ரூ.88.000 க்கு விற்கப்பட்டு வருகிறது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}