தொடர் சரிவில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.120 குறைவு...பண்டிகை காலத்தில் குஷியான மக்கள்

Oct 17, 2023,02:28 PM IST

சென்னை: நவராத்திரி பண்டிகை, தீபாவளி, கல்யாண சீசன் நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் வாடிக்கையாளர்கள் செம குஷியாகி உள்ளனர். தங்கம் விலையும் இன்றும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.


நேற்று குறைந்திருந்த தங்கம் விலை, இன்றும் குறைந்தே காணப்படுகிறது. தங்கம் விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று அன்று சவரனுக்கு ரூ.360 என உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு ரூ.208 குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரட்டாசி மாதம் முடிய  உள்ள நிலையில் தங்கம் விலை குறைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




மேலும், அடுத்து வரும் ஐப்பசி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகம் வருவதால் இன்றே  தங்க நகை வாங்குவோர்  கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏனெனில், ஐப்பசி பிறந்து விட்டால் தங்கம் விலை குறைவது சந்தேகமே, அத்துடன் தங்கத்தின் தேவையும் அதிகமாகும்  என்பதால் மக்கள் தற்பொழுது நகை வாங்கி வருகின்றனர். தற்போது நவராத்திரி வேறு நடந்து வருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தங்கம், வீடு வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் உரிய சிறப்பான காலம் என்று வேறு சொல்லப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5515 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44120 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6016 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 17 ரூபாய் குறைவாகும். 


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.73.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 588.80 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

news

ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்

news

ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது

news

இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

news

மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!

news

House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

news

நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!

news

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை

news

தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்