துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

Apr 25, 2025,05:48 PM IST
சென்னை: மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அரசுப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும் என்று ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஆர். என். ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. மாநில உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று  தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார். 



மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்!


இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதன் விளைவுகள், எந்தவொரு தர மேம்பாடும் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும் ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும் என்பதால் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா? என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"நாம்" என்பதால் நான் செதுக்கப்பட்டபோதும்.. "நான்" ஆகவே நிலைத்திருந்தேன்.. I!

news

பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!

news

வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

மலரும் மனது!

news

வானத்து தாரகையின் கண்களிலிருந்து.. தாரை தாரையாய்.. The Crying Bride in the Sky

news

தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

news

புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்

news

திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்

news

'ஜனநாயகன்'வருவதில் தாமதம்... ரீ ரிலீசாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் 'தெறி'

அதிகம் பார்க்கும் செய்திகள்