சென்னை: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், அந்த சமயத்தில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
நாட்டில் பண்டிகை காலங்கள் என்றாலே படு குஷி தான். அதிலும் தீபாவளி பொங்கல் பண்டிகை என்றால் சொல்லவே வேணாம். தொடர் விடுமுறை காரணமாகவும் மக்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் இந்த பண்டிகை காலங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ரயில் பேருந்துகளை மக்கள் நாடிக்குச் செல்கின்றனர். அப்போது அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த சமயத்தில் மக்கள் பாதுகாப்பு இன்றியும் தவித்து வருகின்றனர்.
இது தான் சமயம் என்று தனியார் வாகனங்களும் கூடுதல் கட்டணத்தை வசூலித்து விடுகின்றனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏனெனில் இந்த நாட்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள பேருந்துகளை நகரங்களில் இயக்குவதால் அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்க ஏற்கனவே தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் தொடர்பு விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து செல்வதற்கும் வருவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
அதேபோல் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது. இது மக்களிடையே பெருமளவில் வரவேற்கப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும் மக்கள் தங்கள் பொழுதுபோக்குகளை கழிக்க வெளியே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், சொந்த ஊர்களுக்கு பயணிப்பதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர். இதனால் பண்டிகை நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இதனை சமாளிக்க தமிழக அரசு ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் வார இறுதி நாட்கள் மட்டும் பண்டிகை காலங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை சமாளிக்கவும், அப்போது ஏற்படும் கூட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையிலும் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு சார்பில் ஓட்டுநர் நடத்துபவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
கொல்கத்தாவை உலுக்கி எடுத்த கன மழை.. 3 பேர் பலி.. ரயில் சேவைகளும் பாதிப்பு
பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் மகள் மீண்டும் களத்தில் குதிக்கிறாரா?
நவராத்திரி 2ம் நாள் வழிபாடு .. இன்று என்ன கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்!
நவராத்திரி திருவிழா.. பராசக்திக்கான 9 நாட்கள்.. ஆடுவது சக்தி.. ஆட்டுவித்து ரசிப்பது சிவம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 23, 2025... இன்று எண்ணங்கள் ஈடேறும் நாள்
தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!
விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்
{{comments.comment}}