- க.யாஸ்மின் சிராஜூதீன்
மழலை சிரிப்பு
மனச கொள்ளையடிக்குது
பொக்கைவாயில் சிரிப்பு பொங்கி வழியுது....
பல் முளைக்கல
பேச விழையுது
புது மொழிய தானே
பேசுது.....
இடம்பெயர முயற்சி
செய்யுது...
முட்டி போட்டு நம்மை ஓட வைக்குது....
தந்தி தவழ்ந்து நடக்கப் பார்க்குது...
விரல் பிடித்து நடந்து
நம்பிக்கை ஊட்டுது...

பட்டாம்பூச்சி போல வாழ்க்கை பறக்குது....
மழலை போல மீண்டும் மாற்றுது......
பல் இல்லாம
பொக்கைவாயில் பேச்சு குழறுது ....
நடந்த கால்கள் முடியாம கிடக்குது.....
ஓட்டம் எல்லாம் உதவி தேடுது....
இங்கே நிலையானது
என்ன இருக்குது....
குணம் ஒன்றே நீ இல்லாம
நின்று பேசுது....
வருவதும் போவதும்
யாருக்கும் தெரியல
நீண்ட பயணம் ஒரு நிமிடம் போல மறையுது...
வாழும் நாளில் மகிழ்ந்து வாழ்ந்திடு...
ஊர் போற்றும் மனிதனாய் இருந்திடு!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}