- சிவ .ஆ.மலர்விழி ராஜா
தரணியில் வாழ்ந்திட.....
இறைவனின் ஆசிகள் வேண்டும்...... !
தமிழ் நாட்டில் பிறந்திட.....
நம் தாயின் கருவறை
வணங்கிட வேண்டும்....!
பாரத தேசத்தில் தமிழ் நாட்டின் பண்பினை போற்றி
கரம் கூப்பி சிரம் தாழ வேண்டும்....!
தமிழ் நாட்டின் பெருமைதனை....
ஞாலமெல்லாம் நவின்றிட வேண்டும்.....!

ஞானிகளும் சித்தர்களும் சிறப்பித்த நாடு.....
தமிழ்நாடு எங்கள் உயிர் மூச்சு......
என்பதில் பெருமை கொள்ளவேண்டும்.....!
அன்புக்கும் பஞ்சமில்லை....
அன்னத்திற்கும்.....
குறைவில்லை என்ற தமிழரின்.....
சங்கின் நாதம் புகழ்பெற வேண்டும்......!
திருத்தலங்களில் எல்லாம் தெய்வத் தமிழ்.....
ஒலித்திட வேண்டும்......!
புண்ணிய பூமி எங்கள்
தமிழ் நாடென்று.....
நாளும் .....
புன்னகைத்திட வேண்டும்......!
வாழ்க தமிழ்நாடு
வளர்க தமிழ்மொழி
என்று......
வையகம் போற்றிட வேண்டும்.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
அஜித்தை அடுத்து இயக்க போவது இவர் தானாமே...கதையையும் இப்பவே சொல்லிட்டாரே
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!
துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்
{{comments.comment}}