சென்னை: 2025 ஆம் ஆண்டு நாளை தொடங்க உள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு நாளை பிறக்க உள்ளது. இந்த புது வருடத்தை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல் மாணவர்களும் இந்த புது வருடத்தில் என்ன மாதிரியான தீர்மானங்களை நிறைவேற்றலாம்.. என்ன தீய பழக்கங்களை கைவிடலாம் என்ற நோக்கிலும் முடிவுகளை கையாண்டு வருகின்றனர். அதேபோல் 2025 ஆம் ஆண்டு பொது தேர்வுகளை நோக்கியும் மாணவர்கள் திட்டமிட்டு இது மட்டுமில்லாமல் வருகின்ற ஆண்டில் என்னென்ன பண்டிகைகள் எப்போது கொண்டாடப்படுகிறது.

எந்த பண்டிகையின் போது தொடர் விடுமுறைகள் வருகிறது.. அப்போது எங்கு செல்லலாம்.. என்பது தொடர்பாகவும் மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் 23 பொது விடுமுறை நாட்களை முன்கூட்டியே அரசு அறிவித்துள்ளது. அதை ஒரு முறை பார்த்து வச்சுக்கங்க.
1. ஜன 1 - ஆங்கில புத்தாண்டு,
2. ஜன 14 - தைப் பொங்கல்,
3. ஜன 15 - திருவள்ளுவர் நாள்,
4. ஜன 16 - உழவர் திருநாள்,
5. ஜன 26 - குடியரசு தினம்,
6. பிப் 11 - தைப்பூசம்,
7. மார்ச் 30 - தெலுங்கு வருடப்பிறப்பு,
8. மார்ச் 31 - ரம்ஜான்,
9. ஏப்ரல் 1 - கணக்கு முடிப்பு,
10. ஏப்ரல் 10 - மகாவீர் ஜெயந்தி,
11. ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு- அம்பேத்கர் பிறந்த நாள்
12. ஏப்ரல் 18 - புனித வெள்ளி,
13. மே 1 - மே தினம்,
14. ஜூன் 7 - பக்ரீத்,
15. ஜூலை 6 - முஹர்ரம்,
16. ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்,
17. ஆகஸ்ட் 16 - கிருஷ்ண ஜெயந்தி,
18. ஆகஸ்ட் 27 - விநாயகர் சதுர்த்தி,
19. செப் 5 - மிலாதுன் நபி,
20. அக் 1 - ஆயுத பூஜை,
21. அக் 2 - விஜயதசமி,
22. அக் 20 - தீபாவளி,
23. டிச 25 - கிறிஸ்துமஸ்
ஆகிய நாள்களில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}