மும்பை: புதிய கல்வி கொள்கையை மகாராஷ்டிராவில் அமல்படுத்தியது பாஜக கூட்டணி அரசு.
பள்ளிக் கல்விக்கான தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின்படி வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் கட்ட வாரியான அமலாக்கத் திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 16ல் அறிவித்தது.
மகாராஷ்டிரா முழுவதும் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்பட உள்ளது.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அரசு ஆணையில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற மொழி வழிப் பள்ளிகள் ஏற்கனவே 3 மொழித் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. ஏனெனில் மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக உள்ளன. எனவே இது தானாகவே 3 மொழிகளை உள்ளடக்கியதாகிறது. மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும். இந்த புதிய கொள்கை 2025 முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
என் தமிழ்.. ஏன் தமிழ்?
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
Folk song by PS Murugesan: பட்டிக் காட்டு மாமன் என்னை கட்டிக் கொள்ள வா புள்ளே!
பாஸ்போர்ட் என்றால் என்ன.. அதை எப்படி எடுக்கணும்.. மாணவர்களுக்கு சூப்பர் கிளாஸ்!
தேவதை போல் நீ நடந்து.. பட்டுப்புடவை அணிவதன் மகிமை என்னன்னு தெரியுமா?
{{comments.comment}}