சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் கோட் (The Greatest of All Time). ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது. ஸ்நேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், லைலா, பிரேம்ஜி, யோகிபாபு, ஜெயராம், அஜ்மல் அமீர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. விஜய்யின் 68வது படமாக உருவாகி உள்ள இந்த படம் ரூ.500 கோடி பட்ஜெட் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விஜய் படம் என்றாலும் சரி, வெங்கட் பிரபு படம் என்றாலும் சரி ரசிகர்களிம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இது இருவரும் சேர்ந்த படம் என்பதால் எதிர்பார்ப்பு, பரபரப்பிற்கு பஞ்சமே கிடையாது. படம் அறிவித்தது முதலே அதிக எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்து வருகிறது. இந்த படத்தில் பல ஸ்பெஷல் உள்ளது. விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு முன்பாக வர போகிற படம் போன்ற பல காரணங்களால் இந்த படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கோட் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து இந்த டிரைலர் யூட்யூப்பில் சாதனை படைத்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களை அதிகம் கவர்ந்த கோட் படத்தின் டிரைலர் எப்படி இருக்கிறது?
டிரைலருக்கு முன்பே, "நண்பா...நண்பி...தயவு செய்து ஹேட்போன் போட்டு, ஸ்க்ரீஜ் பிரைட் செய்து வைத்து பாருங்கள்" என்ற வாசகத்தை போட்டு ஹாட்பீட்டை எகிற வைத்துள்ளனர். துப்பாக்கி சத்தம், விஜய்யின் அதிரடி ஆக்ஷனுக்கு நடுவே அண்ணே வர்றார்...வழிவிடு என்ற இன்ட்ரோ கார்டு, விஜய்யை காட்டுவதற்கு முன்பே பிரசாந்த் அவருக்கு கொடுக்கும் இன்ட்ரோ ஆகியவை வேற லெவலில் உள்ளது. பயங்கரவாதிகள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வருகிறார் விஜய். அவரது மனைவி ஸ்நேகா. நண்பர்கள் பிரபு தேவா, பிரசாந்த் என காட்டுகிறார்கள்.
நண்பர்களுடன் பார்ட்டியில் என்ஜாய்மென்ட், குடித்து விட்டு மனைவியிடம் மாட்டிக் கொள்ளும் கணவர், வேலையில் அதிரடி ஆக்ஷன் என விஜய்யின் பல விதமான பரிமாணங்களை ஒரே ஸ்க்ரீனில் கொண்டு வந்து, விஜய்யின் திறமையை, அவரது ரசிகர்களின் ரசனை தெறிந்து நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார் வெங்கட் பிரபு.

ஷாட்டுக்கு ஷாட் ஆக்ஷன், ஃபிரேம் மாற்றம் என கண் முன் மின்னல் வேகத்தில் காட்சிகள் வந்து போகிறது. இடை இடையே வந்து போகும் ரிலாக்ஸ் காட்சிகள், வசனங்கள் ஆகியன வித்தியாசமான உணர்வை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. விஜய்யின் அப்பா, மகன் காம்போ, இரண்டு உருவங்களில் அசத்தும் ஆக்ஷன், ஒய்.ஜி.மகேந்திரா சொல்லும், வயதானாலும் சிங்கம் சிங்கம் தான், விஜய் சொல்லும் என்னை யாராலும் தடுக்க முடியாது போன்ற வசனங்கள் டிரைலருக்கு செம ஹைலைட்டாக உள்ளது.
டிரைலரின் கடைசியில், மருதமலை மாமணியே முருகைய்யா என காதில் பூ, கையில் சாம்பிராணியுடன் வரும் விஜய், ஒரு விநாடி கில்லி வேலுவை நினைவுபடுத்தி விட்டு போகிறார். இந்த படத்திலும் கில்லியாக விஜய் பட்டையை கிளப்ப போகிறார் என மறைமுகமாக காட்டி உள்ளார் வெங்கட் பிரபு. யுவன்சங்கர் ராஜாவின் இசை பட்டையை கிளப்புவதாக உள்ளது. ஆக மொத்தம் அத்தனை அம்சங்களையும் சூப்பர் பார்முலாவில் கலக்கி விஜய் ரசிகர்களுக்கு வெறித்தனமான விருந்து படைத்துள்ளார் வெங்கட் பிரபு என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
படத்தை எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க? ஏன் செப்டம்பர் 5 வரை வெயிட் பண்ண வைக்கிறீங்க? அவ்வளவு நாள் காத்திருக்கணுமா? என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு உள்ளது டிரைலர். டிரைலர் மட்டுமல்ல கோட் படமும் வசூல் சாதனை படைக்கும் என்பது இப்போதே உறுதியாகி விட்டது.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}