- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: வாசக் கருவேப்பிலையே.. என் மாமன் பெத்த மல்லிகையே.. அப்படின்னு ஒரு சூப்பரான பழைய பாட்டு இருக்கு. ஊர்களுக்கு தனியார் பஸ்களில் போகும்போது, இந்த மாதிரியான பாட்டுக்களை கேட்டுட்டே ஜாலியா டிராவல் பண்ணிருப்போம்.. இப்ப அதை விட்ருங்க.. அது நமக்குத் தேவையில்லை.. நாம இப்போ பாக்கப் போறது கருவேப்பிலை புளிக்குழம்பு.. சொன்னதுமே நாக்குல ஜொள்ளு ஊறுதா.. செஞ்சு பார்த்து சாப்பிடுங்க.. சிறப்பா இருக்கும்.
கருவேப்பிலையை சாம்பார் பொரியல் கூட்டு மற்ற அனைத்திலும் நாம் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றை நாம் நீக்கி தான் சாப்பிடுவோம். இப்படி கருவேப்பிலை புளிக்குழம்பு செய்தால் முழுமையான கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் கிடைக்கும். ஓகே.. ஒரு நொடி கூட தாமதிக்காம கிச்சனுக்குள் ஓடீரலாம்.. வாங்க!

தேவையான பொருட்கள்
கருவேப்பிலை கழுவி ஆய்ந்தது - ஒரு கப் நிறைய
தேங்காய் துருவல் - இரண்டு ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
புளி - ஒரு பெரிய நெல்லி சைஸ்
தக்காளி - ஒன்று கட் செய்யவும்
சிறிய வெங்காயம் - பூண்டு ஆறு பல்
வர மிளகாய் - ஆறு
மல்லித்தூள் - இரண்டு ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு காரம் - தேவைக்கு ஏற்ப அவரவர் விருப்பத்திற்கும் ஏற்ப
செய்முறை
1. கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு தக்காளி நன்றாக வதக்கவும் அதே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. அதே கடாயில் வெங்காயம் கருவேப்பிலை போட்டு லேசாக வறுக்கவும்
3. மிக்ஸி ஜாரில் வதக்கிய பூண்டு தக்காளி கருவேப்பிலை வெங்காயம் தேங்காய் துருவல், சீரகம் வர மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்
4. அதே கடாயில் மீதி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு மிக்ஸி ஜாரில் போட்ட கலவையை ஊற்றவும் உப்பு தேவைக்கு போடவும்
5. மல்லித்தூள் சேர்க்கவும்
6. புளியை நன்றாக கரைத்து அதில் ஊற்றவும்
7. ஊற்றிய நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்
8. இப்பொழுது கமகமன்னு கருவேப்பிலை புளி குழம்பு ரெடி சூடான சாதத்திற்கும் சிறுதானிய பொங்கல் கூட சாப்பிட அருமையாக இருக்கும்
கருவேப்பிலையின் பயன்கள் என்ன இருக்கு தெரியுமா.. முதல்ல அதைத் தெரிஞ்சுக்கங்க
1. கருவேப்பிலை கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
2. செரிமானத்தை அதிகரிக்கும்
3. சருமம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது
4. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்துள்ளது
5. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
6. கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}