- ஜி. சரளா
சோயா சங்க் 65.. இது செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. மொறுமொறுன்னு சாப்பிடுவதற்கு சரியான சைட் டிஷ் இது.
சோயா சங்க்ஸ் என்பது வேறு ஒன்றும் இல்லைங்க.. சோயா துண்டுகள்தான். சோயா துண்டுகள் என்ற பெயர் அது தயாரிக்கப்படும் மூலப்பொருளான சோயா பீன்ஸ் என்பதிலிருந்து வந்தது. இதில் "சங்ஸ்" (Chunks) என்பது அதன் வடிவத்தைக் குறிக்கிறது. சோயா பீன்ஸிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் மீதமுள்ள சோயா மாவைக் கொண்டு, அதிக அழுத்தத்தில் இவை சிறிய துண்டுகளாகத் தயாரிக்கப்படுகின்றன.
சோயா மாவிலிருந்து கொழுப்பை நீக்கிவிட்டு அதை உருளை வடிவத்திலோ அல்லது சிறு துண்டுகளாகவோ மாற்றுவார்கள். இதனைச் சமைக்கும்போது தண்ணீரில் ஊறவைத்தால், அது இறைச்சியைப் போலவே மென்மையாக மாறும். இன்னும் சிம்பிளா புரிய வைக்கணும்னா, இதை நம்ம ஊரில் மீல் மேக்கர் என்று சொல்வோம். மீல்மேக்கர் நிறுவனம்தான் இந்த சோயா சங்ஸை அறிமுகப்படுத்தியதால் மீல்மேக்கர் என்ற பெயரே பாப்புலராகி விட்டது.
சோயா சங்க்ஸில் அதிக அளவில் புரதச் சத்து உள்ளது. இதன் டேஸ்ட்டும் இறைச்சியின் சுவை போலவே இருக்கும். இதனால்தான் சைவப் பிரியர்களின் இறைச்சியாக இது பார்க்கப்படுகிறது.
சரி சோயா சங்க்ஸ் எப்படிப் பண்ணலாம்னு பார்க்கலாமா
தேவையான பொருட்கள்

சோயா சங்க்ஸ்
வெங்காயம்
தக்காளி (பாதி அளவு)
மிளகு
சிக்கன் 65 மசாலா
இஞ்சி பூண்டு விழுது
பெருங்காயத்தூள்
முட்டை (ஒன்று)
செய்முறை
வெங்காயம், தக்காளி, மிளகு, சிக்கன் 65 மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயத்தூள் மற்றும் ஒரு முட்டை ஆகியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.
சோயா சங்க்ஸை சுடுதண்ணீரில் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
தயார் செய்த மசாலாவை சோயா சங்க்ஸின் மேல் தடவி, சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.
மசாலா ஊறிய பிறகு, அவற்றை சூடான எண்ணெயிட்டு பொரித்து எடுத்தால் சுவையான 65 தயார்.
Tips and Photo: G Sarala
(G Sarala, Creative writers, Chennai)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}