மணிமா
செட்டிநாட்டு அடுப்படியின் .உக்காரைக்கு... தாங்கள் தந்த அபரிதமான வரவேற்புக்கும்....சிப்பி காளான் கிரேவிக்கு தந்த அளப்பற்கரிய வரவேற்புக்கும் .... மணி மாவின் மனப்பூர்வமான நன்றிகள் ...
இன்று நாம் 10 நிமிட நேரத்தில் பட்டென்று எளிதாக செய்யக்கூடிய பன் பர்பி ஸ்வீட் பார்ப்போமா. இது செய்வது மிக மிக எளிது, வாங்க பார்க்கலாம்.
அவசரத்திற்குச் சாப்பிடுவதற்காக ஆறு பன் உள்ள ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டு வந்து நான்கு பிரெஷா சாப்பிட்டு மீதி இரண்டு காய்ந்து விடும் .. அல்லது அதில் சில துண்டுகள் மீந்து விடும். இது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். ஆனால் இதை வேஸ்ட் செய்ய வேண்டியதில்லை.
இவற்றை மிக்ஸியில் இட்டு தூள் செய்து கொள்ளவும். இது மட்டுமல்லாமல், புதியதாக உள்ள ரஸ்க் வைத்தும் எளிதாக ஸ்வீட் பண்ணலாம். அதுதான் பன் பர்பி.. பன் பர்பி செய்ய கிச்சனுக்குள் போவோமா வாருங்கள் ...
தேவையான பொருட்கள்

பன்... பிரட்...ரஸ்க்.. ஏதேனும் ஒன்றை தூள் செய்து எடுத்துக் கொள்ளவும் ....ஒரு கப்
சீனி அஸ்கா ... ஒன்னரை கப்
மில்க் பவுடர் ... ஒரு கப் (மில்க் பவுடர் 25 ரூபாய் பாக்கெட்டில் கிடைக்கிறது)
காய்ச்சி ஆற வைத்த பால் .... இரண்டு கப்
நெய்..முக்கால் கப்
முந்திரி 5..பாதாம் 5. ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். ஏலக்காய் தூள் .. கால் ஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை அளவு
இவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்
செய்முறை

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதி நெய் விட்டு பொடித்து வைத்துள்ள பன் தூளை சேர்க்கவும்.
தீ மிதமான நிலையில் இருக்க வேண்டும்.. கருகிவிடாமல் இரண்டு பிரட்டு பிரட்டி விட்டு பால் பவுடரையும் அஸ்கா சீனியையும் சேர்க்கவும் .ஏலத்தூள் சிட்டிகை உப்பையும் சேர்க்கவும்.
சீனி இளகி வரும்.
இரண்டு கப் பாலையும் சேர்க்கவும்.
கைவிடாமல் கிளறவும்.
மீதமுள்ள நெய்யையும் ஒரு ஒரு ஸ்பூனாக சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்தில் வரும். மீதி உள்ள நெய்யையும் விட்டு ஒரு நான்கு நிமிட நேரம் கிளறினால் பூத்து பூத்து மலர்வது போல் இறுகி வரும். தீயை அணைத்து விடவும்.
ஒரு பிளேட்டில் நெய் தடவி அதன் மேல் பொடித்து வைத்த முந்திரி பாதாமை பரவலாக தூவி விடவும்.
கலவையை அதன் மேல் கொட்டி சமமாக பரப்பி விடவும்.
தட்டையான ஒரு கரண்டி (தோசை கரண்டியை கூடஃ எடுத்துக் கொள்ளலாம். நெய் தடவி அதன் மேல் சமப்படுத்தவும்.
பத்து நிமிட நேரம் வெளியே வைத்து ஆற விடவும். பின்பு கத்தி வைத்து வேண்டிய ஷேப்பில் கட் செய்து கொள்ளலாம். உடனேயும் சாப்பிடலாம்.

பர்பியின் மேலாக நட்ஸ் தூவி இருப்பது பார்க்கவும். அழகாக இருக்கும். நான் உள்ளே சேர்த்து கிளறி விட்டேன். சாப்பிடும் போது வாயில் கடிபடுவது நல்லா இருக்கும்.
எளிதான சுவையான
அதிரடி பன் பர்பி ரெடி ..!
பர்பி பதமாக வருமா என்று எண்ணுபவர்கள் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் அல்வா பதத்திலும் எடுத்துக் கொள்ளலாம். ருசி அதேதான்.
இனிமையுடன் பகிர்ந்திடுங்கள்.
மீண்டும் ஒரு செட்டிநாட்டு ரெசிபியுடன் உங்களை சந்திக்கிறேன்
உங்கள்....மணி மா.
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னைக்கு கிழக்கே மையம்; மீனவர்களுக்கு தடை & விமானங்கள் ரத்து!
தித்திப்பான பால்கோவா .. செஞ்சு சாப்பிட ஜஸ்ட் 15 மினிட்ஸ் போதும்!
Monday Booster: நான் கண்ட ஒற்றுமை!
ஒரு சிறிய உதவி… ஒரு பெரிய மாற்றம் - கடைசி பெஞ்சில் இருந்த பெண் (5)
கீழடி.. வரலாறு ஒருபோதும் மௌனமாக இருப்பதில்லை!
பக்திசாரி!
வட்ட கிணறு வறண்டு போச்சு.. நட்ட பயிரும் காஞ்சு போச்சு!
சரஸ்வதி தாயே!
கேள்வியால் மலரும் அறிவு.. திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 2)
{{comments.comment}}