வட்ட கிணறு வறண்டு போச்சு.. நட்ட பயிரும் காஞ்சு போச்சு!

Nov 02, 2026,10:54 AM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


வட்ட வட்ட 

கிணறு வெட்டி

வளமுடன் விளைச்சல் 

தந்தான் விவசாயி

வாழ்வதற்கே உணவு 

தந்தான் விவசாயி


வட்ட கிணறு 

வறண்டு போச்சு

நட்ட பயிரும் 

காஞ்சு போச்சு


வெட்டவெளி பொட்டலிலே 

விவசாயி

வேதனையில் தவிக்கிறானே விவசாயி




அங்கும் இங்கும் 

கடனை வாங்கி

ஆழ்துளைக் கிணறு 

போட்டும்


அல்லல் படும் 

வேதனையில் விவசாயி

அழுது புலம்புகிறான் 

விவசாயி


கள்ளம் இல்லா 

உள்ளம் கொண்டு

காலமெல்லாம் உழைத்தாலும் 

தொல்லை வந்து 

வாடுகிறான் விவசாயி


துன்பங்கள் எங்கே சொல்ல வழிகாட்டி

வட்டி கட்டும் 

கவலையில் மெலிதாகி 

உடல் மெலிதாகி


பொன்னான விவசாயம் கனவாகி

போகுதடா வாழ்க்கை 

ரொம்ப அரிதாகி


ஊருக்கு அன்னமிடும் 

விவசாயம் 

உள்ளபடி ஆகுதடா மாயம்


உழவன் மனசு 

ரொம்ப காயம்

நிலத்தில் ஆடு மாடு கழுதை கூட மேயும்

நிலத்தில் ஆடு மாடு 

கழுதை கூட மேயும்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்