- லோகஸ்ரீ
வரலாறு என்பது கடந்த காலத்தின் கண்ணாடி. அந்தக் கண்ணாடியில் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் பிரதிபலிக்கும் ஓர் அரிய வரலாற்றுச் சான்றாகத் திகழ்கிறது கீழடி. சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் இவ்விடம், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் மூலம் செங்கல் கட்டடங்கள், உறைகிணறுகள், மணிகள், மட்பாண்டங்கள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் போன்ற பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இவை அக்கால மக்களின் நகர்ப்புற வாழ்க்கை, தொழில்நுட்ப அறிவு மற்றும் எழுத்தறிவை வெளிப்படுத்துகின்றன.

சிந்துவெளி நாகரிகமும் கீழடி நாகரிகமும் நகர்ப்புற வாழ்வியல், கட்டட அமைப்பு போன்ற அம்சங்களில் ஒப்பிட்டு ஆராயப்படுகின்றன. இருப்பினும், இவ்விரு நாகரிகங்களுக்கும் நேரடியான தொடர்பு இருந்தது என்பதற்குத் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.
கீழடி என்பது வெறும் மண்ணுக்குள் புதைந்த தொல்லியல் தளம் மட்டுமல்ல; தமிழர்களின் தொன்மையான வாழ்வியலையும் அறிவையும் எடுத்துரைக்கும் வரலாற்றுப் பெட்டகமாகும். மண்ணுக்குள் புதைந்திருக்கும் ஒவ்வொரு சான்றும் நம் கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு புதிய திறவுகோலாக அமைகிறது.
மண் மௌனமாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் புதைந்திருக்கும் வரலாறு ஒருபோதும் மௌனமாக இருப்பதில்லை!
தித்திப்பான பால்கோவா .. செஞ்சு சாப்பிட ஜஸ்ட் 15 மினிட்ஸ் போதும்!
Monday Booster: நான் கண்ட ஒற்றுமை!
ஒரு சிறிய உதவி… ஒரு பெரிய மாற்றம் - கடைசி பெஞ்சில் இருந்த பெண் (5)
கீழடி.. வரலாறு ஒருபோதும் மௌனமாக இருப்பதில்லை!
பக்திசாரி!
வட்ட கிணறு வறண்டு போச்சு.. நட்ட பயிரும் காஞ்சு போச்சு!
சரஸ்வதி தாயே!
கேள்வியால் மலரும் அறிவு.. திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 2)
செட்டிநாடு ரெசிப்பி.. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட்.. தித்திக்கும் கந்தரப்பம்
{{comments.comment}}