Monday Booster: நான் கண்ட ஒற்றுமை!

Nov 02, 2026,11:24 AM IST

- ஹர்ஷினியா


ஒற்றுமை இன்னும் இவ்வுலகில் இருக்கிறதா என்று என்னுள் ஒரு கேள்வி. 


அதை இயற்கையிடம் கேட்டேன்.


மழைத்துளி என்னிடம் சொன்னது, எங்கள் ஒற்றுமையில்தான் இவ்வுலகில் மனிதர்கள் பாவம்  போக்க செல்லும் நீர் நிலைகளே உள்ளன என்று ;


வண்ணங்கள் சொன்னது, எங்கள் ஒற்றுமைதான் உலகம் ரசிக்கும் வானவில் உண்டானது என்று ;


என் வீட்டு பொருட்களிடம் கேட்டேன் , 


நாற்காலி கூறியது என் கால்களின் ஒற்றுமையில் தான் நீ நிம்மதியாக அமர்ந்திருந்திருக்கிறாய் என்று ;


கடிகாரமுள் கூறியது எங்கள் மூவர் ஒற்றுமையில்தான் இவ்வுலகமே இயங்குகின்றன என்று ;


என் உடலிடம் கேட்டேன், எனக்கும் உயிருக்கும் உள்ள ஒற்றுமையில்தான் நீயே உள்ளாய் என்று ;




அணுவை கண்டறிந்த டெமோக்ரிட்டஸ் கூறினார் அணுவின் ஒற்றுமையில்தான் இங்கு அனைத்தும் உள்ளதென்று ;


ஆனால் இங்கு ஆறறிவு  கொண்ட நம்மை போன்ற மனிதர்களிடம் ஒற்றுமை உள்ளதா ?


இதன் விடை நீ அறிவாய் ....


நானறிந்தது ,


எழுத்துக்களின் ஒற்றுமையில்தான் வார்த்தை உருவாகிறது !

ஓசைகளின் ஒற்றுமையில்தான் இசை உருவாகிறது !

ஐந்து விரல் சேர்ந்து தான் ஒரு பொருளை  தூக்கும் ,

அது போல நாமும் ஒற்றுமையாக இருந்தால் வெற்றியைத் தூக்கலாம் !


இதுவே நிதர்சன உண்மை ! 

இதை பின்பற்றிட உன் வாழ்கையடைவதோ வெண்மை!

இதை நான் கூறுவது என் கடமை! 


உங்கள் புதிய ஒற்றுமைத் தொடக்கத்திற்கு என் வாழ்த்துக்கள் !

  

(என் பெயர் அங்காள ஹர்ஷினியா. நான் வீரமணி அவர்களின் மகள். கணிதவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இயற்கையை ரசிப்பதும், பயணம் செய்வதும் மிகவும் பிடிக்கும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்