- ஸ்வர்ணலட்சுமி
கீரையின் அரசன் என்று கூறப்படும் முருங்கைக்கீரை பொரியலை தட்டை பயிருடன் சேர்த்து சமையல் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா.. அதைப் பார்க்கணும்னா நாம முதல்ல கிச்சனுக்குள் போகணும்... வாங்க ஃபிரண்ட்ஸ்...!
தேவையான பொருட்கள்
1. முருங்கைக்கீரை ஒரு கட்டு. (ஆய்ந்து நன்றாக கழுவி வைக்கவும்)
2. தட்டைப்பயிறு ஒரு கப்
3. சீரகம் -1/2 ஸ்பூன்
4. வரமிளகாய் 2 அல்லது பச்சை மிளகாய் இரண்டு தேவைக்கு ஏற்ப.
5. சிறிய வெங்காயம் 10
6. பூண்டு ஐந்து பல்
7. நல்லெண்ணெய் மூன்று ஸ்பூன் (செக்கு எண்ணெயாக இருந்தால் நல்லதும் சுவையாகவும் இருக்கும்)
8. கடுகு உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
9. பெருங்காயம் அரை ஸ்பூன்
10. உப்பு தேவைக்கு ஏற்ப (இந்து உப்பு)
செய்முறை:

1. தட்டைப் பயிறு நன்றாக கழுவி குக்கரில் மூன்று அல்லது நான்கு விசில் விடவும் .அதனுடன் பெருங்காயம் ,சீரகம், சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
2. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும் .
3. 5 பல் பூண்டு தட்டியது போடவும். 4. சிறிய வெங்காயம் பொடியாக கட் செய்தது போட்டு நன்றாக வதக்கவும் சிறிது உப்பு சேர்க்கவும்.
5. முருங்கைக் கீரையை நன்றாக கழுவி அதனுள் சேர்த்து நன்றாக வதக்கவும். 5.கீரை நன்றாக வெந்தவுடன் வேக வைத்த தட்டைப்பயிறு சேர்க்கவும் உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்.
6. தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்
7. சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கீரை சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.
(குறிப்பு :லஞ்ச் பாக்ஸுக்கு பேக் செய்வது என்றால் தேங்காய் சேர்க்க வேண்டாம்.)
பயன்கள்:
முருங்கைக்கீரை வைட்டமின் ஏ, சி , பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நிர்வகிக்க உதவுகிறது. நீரிழிவு நோய்க்கு சிறந்த ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாகும் இன்சுலின் உணர் திறன் அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இதில் அதிகம் உள்ளன. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முருங்கைக்கீரையில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் சருமத்தை பள ப ளப்பாக வைக்க உதவுகிறது.
மலச்சிக்கல், வீக்கம், வாயு மற்றும் இரைப்பை அலர்ஜி ஆகியவற்றை போக்க உதவுகிறது .செரிமான கோளாறுகளுக்கு எதிராக போராட உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.
மேலும் "கீரையின் அரசன்"- முருங்கைக்கீரை . இதில் பொட்டாசியம் ,கால்சியம், காப்பர் ,சோடியம், மெக்னீசியம், ஜிங்க் நார்ச்சத்து, புரதம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
(Cowpea) தட்டைப்பயிறு பயன்கள்:
தட்டைப்பயிறு காராமணி என்றும் அழைக்கப்படும். இது செரிமானத்திற்கு உதவும் ஒரு நல்ல உணவு. குடல் இயக்கத்தை ஒழுங்கு படுத்துகிறது. மலச்சிக்கலை தடுத்து குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும். இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்தவும், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் ஒரு நல்ல உணவு.
குழந்தைகளுக்கு இது போன்ற உணவுகளை சிறுவயதிலிருந்தே கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இது போன்ற பயனுள்ள ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
{{comments.comment}}