எத்தனையோ கீரை சாப்பிட்டிருக்கலாம்.. சுக்கான் கீரை செஞ்சு பார்த்திருக்கீங்களா.. செம கீரைங்க!

Mar 15, 2025,01:18 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


"அம்மா கீரைம்மா.. கீரை.. சுக்கான் கீரை சுக்கான் கீரை"


என்னாது சுக்கான் கீரையா.. புதுசா இருக்கே.. !


அட, சுக்கான் கீரை புதுசு இல்லைங்க.. சூப்பரான சத்தான ஆரோக்கியமான கீரை இது. சுக்கான் கீரை கல்லீரலை பலப்படுத்தி மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ரத்தத்ததை சுத்திகரிக்கிறது. இதயத்தைப் பாதுகாக்கிறது. பித்தம் தணிக்கும். ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.


இந்தக் கீரை நல்ல புளிப்புத்தன்மை கொண்டது. கீரையிலேயே புளிப்புச் சுவை இருப்பதனால் புளி சேர்க்காமல் 10 நிமிடத்தில் சமைக்கலாம். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். மேலும் நல்ல பசியையும் தூண்டும் இந்த சுக்கான் கீரையை பற்றி ஒரு சுவையான ரெசிபி பார்க்கலாம் வாங்க.


இதை சமைக்க பத்து நிமிடமே ஆகும். எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா:-


தேவையான பொருட்கள்:




சுக்கான் கீரை ஒரு கட்டு

சின்ன வெங்காயம் 10

பூண்டு 10 பல்

வர மிளகாய் 3 ( தேவைக்கு ஏற்ப)

துவரம் பருப்பு+ பாசிப்பருப்பு ஒரு கப்

மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

சீரகம் ஒரு ஸ்பூன்


தாளிக்க 1. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் 2. கடுகு 3. உளுத்தம் பருப்பு 4. கருவேப்பிலை 5. மல்லித்தழை

உப்பு காரம் தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்


செய்முறை:


துவரம் பருப்பு பாசிப்பருப்பு நன்றாக கழுவி ஒரு குக்கரில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி ,பெருங்காயத்தூள், சீரகம் சிறிது, நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும் மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்,.


ஒரு கடாயில் நன்றாக கழுவிய சுக்கான் கீரை, வெங்காயம் ,பூண்டு ,வர மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். இந்தக் கீரை கலவையை குக்கரில் இருக்கும் பருப்பில் சேர்த்து நன்றாக கடையவும் அல்லது மிக்ஸியில் பல்ஸ் மோடில் போட்டு உப்பு போடவும்


கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, இரண்டு பூண்டு சின்ன வெங்காயம் தட்டிக் கொண்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.


சுக்கான் கீரை பருப்பு சேர்த்த கலவையை ஒரு  சர்விங் பவுலில் மாற்றி மல்லித்தழை தூவவும். சூடான சாதம், ராகி களி உடன் சேர்த்து சாப்பிட அருமையான சுக்கான் கீரை பருப்பு கடையல் ரெடி. நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்கான் கீரையை அடிக்கடி சாப்பிடுங்க பிரண்ட்ஸ். டேஸ்ட் அப்படி இருக்கும்.....


என்ன பிரண்ட்ஸ் சூப்பரா இருக்கா.. செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.. சுப்ரீமா இருக்கும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு

news

கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி

news

விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

news

தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!

news

வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே

news

Light House.. சிங்காரச் சென்னையின் மின்னும் கண்கள்..!

news

கொள்ளை கொள்ளையாய் நல்ல பயன்கள் நல்கும் தாயே!

news

உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!

news

என் நாட்குறிப்பிலிருந்து.. நிழலாடிய குந்தவை நாச்சியார்.. மறக்க முடியாத தஞ்சை பயணம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்