ஹைதராபாத்: குண்டூர் காரம் படத்தில் நான் பிடித்தது ஆயுர்வேத பீடி. வழக்கமான புகையிலை பீடி அல்ல.. புகை பிடிக்கும் பழக்கத்தை நான் ஆதரிக்க மாட்டேன்.. நானும் புகை பிடிக்க மாட்டேன் என்று நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார்.
சினிமாவில் சூப்பர் நடிகர்கள் புகை பிடிப்பது போல, மது அருந்துவது போல நடிக்கும்போது அது சர்ச்சையைக் கிளப்பி விடுகிறது. காரணம், அவர்களைப் பின்பற்றும் ரசிகர்களும் அதைப் பின்பற்றுவார்கள் என்பதால் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இதுபோன்ற கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இதுபோன்ற கோரிக்கை அடிக்கடி வரும். அவர்களது படங்களில் இதுபோன்ற காட்சிகள் வந்தால் சர்ச்சையாகி விடுவதும் வழக்கம். இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கும் இதுபோல ஒரு சர்ச்சை வந்துள்ளது.

மகேஷ்பாபு நடிப்பில் குண்டூர் காரம் என்ற படம் சங்கராந்திக்கு வந்து பெரும் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தில் அவர் பீடி பிடிப்பது போன்ற காட்சிகள் வருகின்றன. இது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் அதுகுறித்து மகேஷ் பாபு விளக்கியுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற காட்சிகளில் மகேஷ்பாபு நடிக்க மாட்டார் என்பதால் குண்டூர் காரம் புகை பிடிக்கும் காட்சி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மகேஷ்பாபு கூறுகையில், இந்தப் படத்தில் நான் பிடித்தது நிஜமான பீடியே அல்ல. அது ஆயுர்வேத பீடி. கிராம்பு இலைகளால் உருவாக்கப்பட்டது அது. தனிப்பட்ட முறையில் எனது உடல் நலன் குறித்து எனக்கு அக்கறை உண்டு. அதேபோலத்தான் மற்றவர்களும் உடன் நலனுடன் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன். எப்போதும் நான் புகை பிடிக்கவும் மாட்டேன், அந்தப் பழக்கத்தை ஆதரிக்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார் மகேஷ்பாபு.
மகேஷ்பாபுவின் இந்தப் பேச்சு தெலுங்குத் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை விட முக்கியமாக அவரது ரசிகர்கள் இதை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார்னா சும்மாவா.. பாராட்டுகள் மகேஷ்பாபு காரு!
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}