சென்னை: கனவுகள் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் நம்முடைய ஆழ்மன நினைவுகளின் வெளிப்பாடு தான் கனவுகள் என்றும், நாம் உறங்கும் போது பிரபஞ்ச சக்தியும், முன்னோர்களும் நம்முடன் தொடர்பு கொண்டு நம்முடைய எதிர்காலம் குறித்த சில விஷயங்களை அறிவுறுத்துவதன் அடையாளம் தான் கனவுகள் என சொல்லப்படுகின்றன. அதிலும் அதிகாலையில் காணும் கனவுகள் மிகவும் முக்கியமானவையாகும். இவைகள் நம்முடைய எதிர்காலம் பற்றிய முக்கிய விஷயத்தை நமக்கு சொல்வதாகும்.
அப்படி சில குறிப்பிட்ட பொருட்களை உங்களுடைய கனவில் அதிகாலை வேளையில் கண்டால் அது உங்களை தேடி பணமும், செல்வ வளம் வரப் போவதற்கான அறிகுறிகள் என சொப்பண சாஸ்திரம் சொல்கிறது. இந்த பொருட்களை உங்கள் கனவில் கண்டால் சந்தோஷம், அதிர்ஷ்டம் வரும் என்றும் சொல்லப்படுகிறது.
அதிர்ஷ்டம் தரும் கனவுகள் :
* தங்க காசு - தங்க காசுகளை உங்களுடைய கனவில் கண்டால் உங்களை தேடி அதிர்ஷ்டம் வரப் போவதாகவும், பண வரவு அதிகரிக்க போவதாகவும் அர்த்தம். தங்க காசுகள் செல்வ வளத்தையும், பாதுகாப்பான எதிர்காலத்தையும் குறிக்கக் கூடியவையாகும்.
* பழங்கள் - பல வகையான பழங்களை உங்களின் கனவில் கண்டால் பணம் பல வழிகளிலும் வரப் போகிறது, அதிகப்படியான மகிழ்ச்சி வரப்போவதாகவும் அர்த்தம்.
* நீர் வீழ்ச்சி - அருவியில் நீர் கொட்டுவதை போல் கனவு கண்டால் இதுவரை நீங்கள் சந்தித்த இழப்புகள் அனைத்தும் நீங்கி, அருவி போல் உங்கள் வாழ்க்கையில் பணம் பொழிய போவதாக அர்த்தம்.
* பறவைகள் - பறவைகள் பறப்பதாக கனவு கண்டால் அது சாதனை, உல்லாசத்தின் அடையாளமாகும். வானத்தை போல் உங்களின் வாழ்க்கை உயர போவதாகவும், தாராளமாக பணம் புரள போவதாகவும் அர்த்தம்.
* புதிய வீடு - புதிதாக கட்டிய வீடு உங்கள் கனவில் வந்தால் நிலையான செல்வம், பாதுகாப்பு, பண வரத்து, பலம் ஆகியவை அதிகரிக்க போவதாக அர்த்தம். உங்களின் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்க போவதாக அர்த்தம்.
* தெளிவான வானம் - தெளிவான, நீல நிற வானத்தை உங்கள் கனவில் கண்டால் உங்களின் பணக் கஷ்டம் தீரப் போவதாக அர்த்தம். உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் போவதாக அர்த்தம்
* பூ மாலை - பொதுவாக பூக்களை கனவில் காணுதல் நல்லதாக கருதப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமாக கருதப்படும் பூ மாலைகளை கனவில் கண்டால் வெற்றிகளும், அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரப் போவதாக அர்த்தம். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.
* பசுமையான வயல்கள் - பசுமையான வயல்வெளிகளை கனவில் காண்பது வெற்றிக்கான அறிகுறியாகும். விரைவில் உங்களின் வாழ்க்கை பசுமையாக மாறப் போகிறது, நிதி நிலை உயரப் போகிறது, உங்களின் கடின உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன் மிக விரைவிலேயே கிடைக்க போகிறது என்று அர்த்தம்.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}