மும்பை: மகாராஷ்டிராவில் தனது தொகுதிப் பங்கீட்டை இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன்படி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் தனது தொகுதிப் பங்கீட்டை முடித்து வருகிறது. உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவிலும் முடிவுக்கு வந்துள்ளது.

மகா விகாஸ் அகாதி கூட்டணி என்ற பெயரில் மகாராஷ்டிராவில் இயங்கும் இந்தியா கூட்டணி அங்குள்ள 48 தொகுதிகளையும் பிரச்சினை இல்லாமல் பிரித்துக் கொண்டுள்ளது. விரைவில் இந்தத் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே கட்சி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலிருந்து இரண்டு தொகுதிகளை வஞ்சித் பகுஜன் அகாதி என்ற கட்சிக்கு ஒதுக்கும். அதேபோல ராஜு ஷெட்டி என்ற சுயேச்சைக்கு தனது தொகுதியில் ஒன்றை சரத் பவார் கட்சி கொடுக்கவுள்ளது.
மும்பையில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் உத்தவ் தாக்கரே கட்சி நான்கு இடங்களில் போட்டியிடும். அதில் மும்பை வட கிழக்கு தொகுதியில் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி போட்டியிடும்.
கடந்த 2019 தேர்தலிலின்போது பாஜக சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தன. அப்போது சிவசேனா கட்சி உடைக்கப்படவில்லை. அதில் சிவசேனா கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18ல் வென்றது. காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் வென்றது. உடைக்கப்படாத தேசியவாத காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வெற்றி பெற்றிருந்தது.
இப்போது சிவேசனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டுமே உடைக்கப்பட்டு விட்டன. அதிலிருந்து பிரிந்து போன ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்தான் ஒரிஜினல் கட்சிகள் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவருமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஷிண்டே முதல்ராகவும், அஜீத் பவார் துணை முதல்வராகவும் இருக்கிறார்கள்.
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}