சென்னை: தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் ஆலார்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. முன்பு எல்லாம் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டும் தான் கத்திரி வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வரும். ஆனால், இப்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழகத்தின் பல மாவட்டங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலை தாங்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும்.
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன் எச்சரிக்கையுடன் செயல்படவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}