"2" மட்டுமில்லையாம்.."3"ம் வருதாம்.. கமல்ஹாசன் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு டபுள் ட்ரீட் காத்திருக்கு!

Jan 21, 2024,03:57 PM IST

சென்னை: விக்ரம் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு சினிமாவில் படுபிஸியாகி விட்டார் கமல்ஹாசன். பல பெரிய பட்ஜெட் படங்களை வரிசையாக கையில் வைத்துள்ளார்.


இந்தியன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து கமல் - டைரக்டர் ஷங்கர் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. இந்தியன் 2 படத்தின் வேலைகள் அடுத்தடுத்த பல காரங்களால் தள்ளி போய் கொண்டே இருந்தது. கிட்டதட்ட 7 ஆண்டுகளாக இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு வேலைகள் போய் கொண்டிருக்கிறது. கதையின் நீளம் கருதி பிறகு அதை இரண்டு பாகங்களாகவும் எடுக்க திட்டமிட்டு தற்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படத்தின் வேலைகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கின்றன.




லேட்ஸ்ட் தகவலின் படி இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் மீதம் உள்ளதாம். இதை படமாக்க இன்னும் 15 நாட்கள் ஷூட்டிங் மட்டும் பாக்கி வைத்திருக்கிறார்களாம். இந்த 15 நாள் ஷூட்டிங் முடிந்ததும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம். இந்தியன் 2 படத்தை ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 


மற்றொரு புறம் இந்தியன் 3 படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்து விட்டதாம். இதன் டப்பிங், விஎஃப்எக்ஸ், எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீரவிமாக நடந்து வருகிறதாம். இந்தியன் 2 படத்தை வெளியிட்ட கையோடு இந்தியன் 3 படத்தை வெளியிடுவதற்கான வேலைகளையும் துவக்க போகிறார்களாம். இந்தியன் 3 படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ரிலீஸ் செய்ய போகிறார்களாம்.


இந்தியன் 2, இந்தியன் 3 இரண்டிலும் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். மறைந்த விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோரின் போர்ஷன்கள் நீக்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளனவாம். இந்த இரு படங்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். ஒரே ஆண்டில் கமலின் இரண்டு படங்களும், அதிலும் சீக்வல் படங்கள் ரிலீசாக உள்ளதால் கமல் ரசிகர்கள் மட்டுமல்ல, டைரக்டர் ஷங்கர் ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இந்தியன் 2 படம் ரிலீசாக உள்ளதால் இந்த படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள், படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்