இவங்க கிட்டயே வேலை இல்லையா?...என்ன கொடுமை சார் இது!!

Jul 21, 2023,12:30 PM IST

டெல்லி : தங்கள் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிதி நிலைமையை வெளியிட்டுள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தாங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்து வருவதாக தெரிவித்துள்ளன. இந்த தகவல் பலவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வேலை பளு, மனஅழுத்தம் என பலரும் தங்களின் கஷ்டங்களை வெளிப்படையாக சொன்னாலும் லட்சங்களில் சம்பளம் வருகிறதே என்ற ஒரே காரணத்திற்காக ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சேருவதையே கனவாக வைத்து பல இளைஞர்கள் படித்தும், ஐடி வேலைக்காக முயற்சி செய்தும் வருகின்றனர். ஆனால் இப்போ ஐடி நிறுவனங்களை சம்பளம் கொடுக்க முடியாத நெருக்கடியான நிதி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



ஐடி துறை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டிற்கான தங்களின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. இந்திய ஐடி துறை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் ஆகியவையும் முதல் காலாண்டில்  தங்களின் செயல்பாடு, வருமானம் குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளன.கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இரு நிறுவனங்களின் வருமானமும் கடுமையாக சரிந்துள்ளன.

டிசிஎஸ் நிறுவனத்தில் வருமானம் மட்டுமல்ல பணியாளர்கள் எண்ணிக்கையும்  96 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 14,136 பேர் வேலை செய்த இடத்தில் தற்போது 523 பேர் மட்டுமே வேலை செய்கிறார்களாம். தற்போது இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 615,318 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 20,000 பேரை வேலைக்கு எடுத்த டிசிஎஸ், கடந்த காலாண்டில் 821 பேரை மட்டுமே வேலைக்கு எடுத்துள்ளது. 

அனுபவம் இல்லாத 40,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்து, அவர்களின் ஆண்டு பணியை கணக்கிட்டு, 12 முதல் 15 சதவீதம் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டிசிஎஸ் முடிவு செய்துள்ளது. இது அனுபவம் வாய்ந்த பணியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதே போல் இன்போசிஸ் நிறுவனமும் முதல் காலாண்டில் 6940 ஆக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளதாம். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 3611 பேராக பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாம். தேவை ஏற்பட்டால் மட்டுமே அதற்கு ஏற்றாற் போல் ஆட்களை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது. வழக்கம் போல் ஏப்ரல் மாதத்தில் சம்பளம் உயர்த்தப்பட்டாலும் வேரியபிள் பே பற்றி நிர்வாகம் இதுவரை முடிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்