நவி மும்பை: இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி சார்பில், ஷெபாலி வர்மா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷெபாலியும், தீப்தியும் அரை சதம் போட்டனர். ரிச்சா மின்னல் வேகத்தில் ஆடி கடைசி நேரத்தில் ரன்கள் உயர வழி வகுத்தார். அதேசமயம், தென் ஆப்பிரிக்கா கடைசி 5 ஓவர்களில் புத்திசாலித்தனமாக பந்து வீசியதால் இந்தியா 300 ரன்களை எட்ட முடியாமல் போய் விட்டது. ஒரு கட்டத்தில் இந்தியா 320 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் சுதாரிப்பால் இந்தியா 300க்குள் நின்று போனது.
ஆனால் இந்திய வீராங்கனைகளின் ஆட்டத்தை இன்று பாராட்டாமல் இருக்க முடியாது. காரணம் எல்லா வீராங்கனைகளும் இன்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஸ்மிருதி மந்தனா 45 ரன்களைக் குவித்தார். ஷெபாலி வர்மா அதிரடியாக ஆடி 87 ரன்களைக் குவித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், 24 ரன்கள் சேர்த்தார். தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 58 ரன்களை விளாசினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 20 ரன்கள் எடுத்தார்.

இன்றைய ஆட்டத்தின் ஸ்டார்கள் என்றால் அது ஷெபாலி மற்றும் ரிச்சாதான். இருவருமே மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிச்சா வெறும் 24 பந்துகளில் 34 ரன்களைக் குவித்தார். அவரது ரன்கள் மேலும் அதிகமாகவே இருந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில ஷாட்கள் அவருக்குக் கை கொடுக்காமல் போய் விட்டது அதேபோல தீப்தி சர்மாவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்.
கடைசி நேரத்தில் நமது வீராங்கனைகள் சற்று சுதாரிக்கத் தவறியதாலும், தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு இறுக்கமாக மாறியதாலும் நம்மால் 300 ரன்களைத் தொட முடியாமல் போனது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில், அயபோங்கா காகா அட்டகாசமாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். மலாபா, டி கிளர்க், சோலி டிரையன் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட 2வது அதிகபட்ச ரன்னாக இந்தியாவின் 298 சேர்ந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தனது சேசிங்கைத் தொடங்கியது. கேப்டன் லாரா மட்டுமே நிலைத்து ஆடி வந்தார். மறு முனையில் சரியான இடைவெளியில் விக்கெட்கள் வரத் தொடங்கின. முதலில் தென் ஆப்பிரிக்கா நிலைத்து ஆடி வந்தது. ஆனால் பின்னர் நிலை குலைய ஆரம்பித்தனர்.
இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா விஸ்வரூபம் எடுத்தார். முதலில் பேட்டிங்கில் ஜொலித்த அவர், பின்னர் பவுலிங்கிலும் பிரமாதமாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா தொடக்க ஆட்டக்காரரா இறங்கி 101 ரன்களைக் குவித்து மிரட்டினார். ஆனால் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் வாய்ப்பை உருவாக்கியும் கூட கடைசி நேரத்தில் சீட்டுக் கட்டு போல சரிந்து போய் விட்டது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு இது மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. முதல் முறையாக இந்திய அணி உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இதுவரை உலகக் கோப்பையை வென்ற நாடுகள்
மகளிர் உலகக் கோப்பையை இதுவரை 3 நாடுகளே வென்றிருந்தன. தற்போது நான்காவது நாடாக இந்தியா இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அடுத்து இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்த வரிசையில் நான்காவது நாடாக இந்தியா இணை ந்துள்ளது.
இந்தியா இதற்கு முன்பு 2005, 2027 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைத் தழுவியிருந்தது என்பது நினைவிருக்கலாம். தனது 3வது முயற்சியில் அது கோப்பையைத் தட்டி வந்துள்ளது.
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}