ஒட்டாவா: கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா சைனியின் இறந்த உடல் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வன்ஷிகா சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். வன்ஷிகா, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் தேவிந்தர் சிங்கின் மகள். எம்.எல்.ஏ குல்ஜித் சிங் ரந்தவாவின் நெருங்கிய உறவினவரும் ஆவார். பஞ்சாப் மாநிலம் டேரா பாசி பகுதியைச் சேர்ந்தவர். அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, டிப்ளமோ படிக்க இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஒட்டாவாவுக்குச் சென்றார்.
இந்த நிலையில்தான் அவரது துர் மரணம் சம்பவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒட்டாவாவில் இந்திய மாணவி வன்ஷிகா இறந்தது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளோம். உள்ளூர் போலீசார் காரணத்தை விசாரித்து வருகின்றனர். இறந்தவரின் குடும்பத்தினருக்கும், உள்ளூர் சமூக அமைப்புகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
வன்ஷிகா ஏப்ரல் 25 அன்று காணாமல் போனார். அவரது செல்போன் ஆப் ஆகியிருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்தனர். போலீஸாரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தனர். இந்த நிலையில்தான் அவரது உடலை கடற்கரையிலிருந்து போலீஸார் மீட்டுள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
{{comments.comment}}