சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. எனப்படும் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இந்தோனேஷியா அரசின் மிக உயரிய விருதான டத்தோ ஶ்ரீ விருதை பெற்றுள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் வில்லனாகவும், நடிகராகவும் நடித்து அசத்தியவர் நடிகர் ராதாகிருஷ்ணன். இவர் திரை உலகிற்கு வரும் முன்பு தொழிலதிபராக விளங்கியவர். வெல்கம் சிட்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர். வெற்றி விழா, வில்லுப்பாட்டுக்காரன், மணிகுயில், தங்கக்கிளி, செவந்த பொண்ணு, மஞ்சள் வெயில், எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா, பாயும் புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
குறிப்பாக இவர் நடித்த ஜில்லா, எல்லாம் அவன் செயல், அவன் இவன் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கென்று ரசிகர் பட்டாளங்கள் திரண்டனர். இவரை ரசிகர்கள் செல்லமாக ஆர்கே என்று அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர் கே ராதாகிருஷ்ணன் இந்தோனேசியா மன்னரின் மிக உயரிய விருதான டத்தோ விருதை பெற்றுள்ளார். இவரின் கலை சேவையை பாராட்டி டத்தோ ஸ்ரீ டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ற விருதை இந்தோனேசியா அரசு அளித்துள்ளது.
இந்த விருதை எனக்கு அளித்து பெருமை தந்துள்ளார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என ஆர்கே கூறி உள்ளார். விருது பெற்றுள்ள ஆர்.கே.வுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
{{comments.comment}}