டெல்லி: அரசியலில் சேரும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, எனக்கு 78 வயதாகி விட்டது. இனிமேல் அதெல்லாம் எனக்கு சரிவராது. எனது பிள்ளைகளுடன், பேரக் குழந்தைகளுடன் நேரம் செலவிடவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்போசிஸ் நிறுவனர் என். ஆர்.நாராயணமூர்த்தி.
இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர் நாராயணமூர்த்தி. இந்தியாவில் ஐடி புரட்சியை ஏற்படுத்திய முன்னோடிகளில் நாராயணமூர்த்தியும் ஒருவர். தற்போது 78 வயதாகும் என்.ஆர். நாராயணமூர்த்தி அவ்வப்போது ஏதாவது பரபரப்பான கருத்தை வெளியிடுவது வழக்கம்.
ஐடி ஊழியர்களின் வேலை நேரம் குறித்து அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பலரும் அவரது கூற்றை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் என்டிடிவிக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு நாராயணமூர்த்தி பதில் தருகையில், 78 வயதில் எந்த பொறுப்பையும் சுமக்க முடியாது. எனவே அப்படி ஒரு திட்டம் என்னிடம் இல்லை. இப்போது எனது பிள்ளைகளுடன், பேரப் பிள்ளைகளுடன் நேரம் செலவிடவே விரும்புகிறேன். இசையை ரசிக்க விரும்புகிறேன். நிறைய படிக்க விரும்புகிறேன்.
இது பேரப் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு பொழுது போக்குவதற்கான வயது. இப்போதுதான் படிப்பதற்கும் நிறைய நேரம் கிடைக்கும். பிசிக்ஸ், கணிதம், பிலாசபி, பொருளாதாரம் என பல தலைப்புகளில் படிக்க விரும்புகிறேன் என்றார் நாராயணமூர்த்தி.
நாராயணமூர்த்தியின் மனைவி சுதாவும், தான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் நிறைய பொதுச் சேவை செய்து விட்டேன். நிறைய பேருக்கு உதவியுள்ளேன். 14 தேசியப் பேரிடர் காலங்களில் பலருக்கு உதவியுள்ளேன். ஒரு கொரோனா பேரிடரையும் பார்த்து விட்டேன். பொது மக்களுக்கு எப்போதுமே நான் ஏதாவது செய்து கொண்டேதான் இருக்கிறேன். அதற்காக ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. இப்படி இருப்பதையே மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றார் சுதா மூர்த்தி.
நாராயணமூர்த்தி - சுதா மூர்த்தி மருமகன்தான் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் என்பது நினைவிருக்கலாம்.
கும்மிருட்டில் மூழ்கிய சென்னை.. பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழையால் மக்கள் ஹேப்பி!
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. பாக். தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள் கள்ள அமைதி ஏன்?.. சீமான்
தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து.. கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டம்.. டாக்டர் ராமதாஸ்
2 மாதங்களில் 5 தற்கொலை.. எப்போதுதான் ஒழியும்.. உயிர்க்கொல்லி நீட் தேர்வு?.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
High BP: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க தக்காளி கை கொடுக்கும்.. எப்படி தெரியுமா?
Liver health: உங்கள் கல்லீரலை பாதிக்கும் மூன்று உணவுகள்.. இதை தவிருங்கள் மக்களே!
ராஜஸ்தான் எல்லைப் பகுதி வழியாக.. இந்தியாவுக்குள் ஊடுறுவிய.. பாகிஸ்தான் ரேஞ்சர் அதிரடி கைது
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?