அறிவு மற்றும் உள்ளுணர்வு (உடல் மற்றும் உள்ளம் .. Intellect, Instinct and Intuition)

Nov 13, 2025,11:05 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


உடலுக்கான உள்ளுணர்வு (Instinct) என்பது இயற்கை விதிக்கானது.. இது முழுவதுமாக இயற்கை தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது.. அந்தப் பொறுப்பு நம்மிடம் கொடுக்கப்படவில்லை.. மூச்சு விடுவது ஜீரணிப்பது இதயம் இயங்குவது இப்படி எல்லாமே இயற்கை கவனித்துக் கொள்கிறது.. நம்மிடம் கொடுத்திருந்தால் தூங்கும் போது மூச்சு விட மறந்திருப்போம்... !!! எப்போதும் யோசித்துக் கொண்டே இருக்கும் நமக்கு இது எல்லாம் செய்வது சாத்தியமா? நாம் உணவு உண்டால் அதைப் பிரித்துப் பகுத்து ஒவ்வொரு பாகத்திற்கும் எது தேவையோ, அதை சீராக இயற்கை செய்து கொள்கிறது.. இதை நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே உடல் நன்றாகவே இயங்கும்.. உடலின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நாம் இந்த இயற்கையை டிஸ்டர்ப் செய்வதால் மட்டுமே.. இதை கவனித்து யோசித்து இருக்கிறோமா? பசிக்கும்போது சாப்பிடுகிறோமா.. தூக்கம் வரும்போது தூங்குகிறோமா? 


அறிவு என்பது நமக்கு வெளி உலகத்தில் வாழ்வதற்கு தேவையான கருவி.. அதன் இயக்கம், வார்த்தை பிரயோகம் லாஜிக் மற்றும் கால்குலேஷன்.. ஆனால் நாம் இதற்கு தான் மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.. 


ஒரு சிறிய கதையை பார்ப்போமா ?





காஷ்முஷ் அப்போது ஒரு கார் டிரைவராக இருந்தார். நாள் முழுவதும் உழைத்து விட்டு களைப்புடன் பக்கத்தில் இருக்கும் கிளப்பிற்கு சென்றார்.. அங்கிருக்கும் பாரில் இரண்டு மணி நேரம் செலவழித்த பிறகு.. பக்கத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு செல்கிறார்..  தனது வீடு அடிக்கும் பச்சை கலரில் பெயிண்ட் செய்யப்பட்டிருப்பதை பார்க்கிறார்.. அவருக்குப் பெரும் கோபம் வந்து விடுகிறது.. திரும்பவும் பாருக்கு சென்று என் வீட்டை யார் பச்சை கலரில் அடித்தது என்று கோபமாக கத்தினார்.. யார் செய்திருந்தாலும் அவரை அடித்து விடுவது என்ற முடிவில் கையில் கட்டையுடன் கத்தினார்.. அப்போது ஆறடி உயரத்தில் ஒரு மனிதன் மல்யுத்த வீரர் போல எழுந்து நின்றார்.. நான்தான் அடித்தேன் என்று கூறி இப்போது என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க..காஷ்முஷ் மிகவும்  அடக்கத்துடன் இல்லை ஃபர்ஸ்ட் கோட் காய்ந்து விட்டது என்று சொல்ல வந்தேன்.. என்று வழிந்தார்..


புத்தி நமக்கு உபயோகமான கருவி என்று தான் கொள்ள வேண்டுமே அன்றி, அதை மாஸ்டராக வைத்தோமானால் பிரச்சனை தான்.. அதுதான் நிறைய இப்போது நடந்து கொண்டிருக்கிறது..  நாம் எல்லாவற்றையும் படித்து தெரிந்து கொள்ள நினைக்கிறோம்.. எல்லாவற்றிற்கும் புள்ளி விவரங்கள் பார்த்து இதுதான் சரி இதுதான் தவறு என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம்.. 

(We depend more in data and information) .. 


உதாரணத்திற்கு பொதுவாக 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.. ஆனால் சிலருக்கு 10 மணி நேரம் தூங்க வேண்டியது இருக்கலாம்.. சிலருக்கு 4 மணி நேர தூக்கமே போதுமாய் இருக்கும்.. இந்தத் தேவை என்பதை நாம் அப்சர்வ் பண்ணி அறிந்து கொள்ளலாம் என்று புள்ளி விவரங்களை நம்புவது சரி இல்லை என்று தோன்றுகிறது.. உணவு முறையும் அப்படித்தான்.. நான்கு மணி நேரம் உறங்கி நாம் நல்ல எனர்ஜியுடன் அன்று செயல்பட முடிந்தால் நமக்கு நான்கு மணி நேரம் ஓகே தான் இல்லையா? உடலுக்கு என்று புத்திசாலித்தனம் உண்டு..(Body has an intelligence) .. எனது வீட்டு நாய்க்குட்டி சில நாட்களில் வாக்கிங் செல்லும் போது புல்லைத் தேடிப் போய் உண்ணும்.. சில நாட்களில் சாப்பிட மறுக்கும்.. அதற்குத் தெரிகிறது.. அது இயற்கையின் புத்திசாலித்தனம்.. 


நாம் தான் வார்த்தைகளில் அதிக நேரம் செலவிடுவதால் இந்த புத்திசாலித்தனத்திற்கு கவனம் கொடுப்பதில்லை.. மாத்திரைகளும் மருந்துகளும் தான் உடலை பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம்..


உள்ள உள்ளுணர்வு (Intuition) இது உள்ளத்திற்கானது.. உள்ளம் என்பது (Heart) எந்த லாஜிக்கும் இல்லாத , பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட உணர்வு என்று சொல்லலாம்..  நம் பகுத்தறிவிற்கு மிகவும் கவனம் கொடுத்து வெளியில் இருந்து வரும் விவரங்களையும் (Information and data) மட்டுமே நம்பி இருந்தோம் ஆனால் உள்ளுணர்வு செயல்பட வாய்ப்பு இல்லை..


நீங்கள் தான் உலகத்தின் முதல் மனிதர்.. திடீரென்று ஒரு தீவில் இருக்கிறீர்கள் என்றால் எப்படி வாழ்வீர்கள்.. படிப்பதற்கு என்று எதுவும் இல்லை.. சமய நூல்கள் இல்லை.. மதமே இல்லை என்று வைத்துக் கொள்வோம்.. ஒவ்வொன்றையும் பார்த்து கவனித்து ஒவ்வொரு கணமும் வாழ வேண்டும் என்றால் நாம் எப்படி வாழ்வோம்.. இப்படி யோசித்தோம் ஆனால்.. நாம் எவ்வளவு தேவையில்லாத குப்பைகளை விவரங்களாக சேர்த்து வைத்துக் கொண்டுள்ளோம் என்று பார்க்க முடியும்.. அப்போது உள்ளுணர்வு செயல்பட ஆரம்பிக்கும்..  இதுதான் நாம் சரியாக வாழ உதவும்..(Intuition is Nature’s guidance ) கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்கள் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள்.. அவர்களால் லாஜிக் பார்க்க முடிவதில்லை.. 


இந்த மூன்றுக்கும் பின்னால் ஒரு பார்வையாளராக (Witness) நமது இருப்பு (Being) உள்ளது…நம் உள்முகமாக திரும்பினால் இந்த விட்னஸ் ஆக நாம் இருப்போம்.. அப்போது புத்தி மற்றும் உள்ளுணர்வுகள் மிகவும் அழகாக செயல்படும்.. நாம் வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம்.. வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தால் நமக்கு இறப்பே இல்லை என்ற நிலையை உணர்வோம்..


நாம் தொடர்வோம்


(மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓமவள்ளி தெரியுமா இந்த ஓமவள்ளி.. அதாங்க கற்பூரவள்ளி.. குட்டீஸ் முதல் பெரியவர் வரை.. சூப்பர் மருந்து!

news

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

news

பாகிஸ்தானை விட்டு வரக் கூடாது.. இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாரியம் அதிரடி உத்தரவு

news

இந்தியா முழுக்க.. 8 இடங்களில் குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த சதிகாரர்கள்.. பரபர தகவல்

news

டெல்லி சம்பவம்...வெடி பொருள் நிரம்பிய 2வது கார் எங்கே? தீவிரமாகும் தேடுதல் வேட்டை

news

டில்லி தாக்குதல் பின்னணியில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

news

SIR.. வாங்கிய படிவங்களை நிரப்பத் தெரியாமல்.. விழிக்கும் மக்கள்.. திரும்பப் பெறுவதில் குழப்பம்

news

அறிவு மற்றும் உள்ளுணர்வு (உடல் மற்றும் உள்ளம் .. Intellect, Instinct and Intuition)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 13, 2025... இன்று பணம் கைக்கு வரப் போகும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்