- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : "தொழிலாளர்களின் உழைப்பின்றி சமூக மேம்பாடு சாத்தியம் இல்லை." தொழிலாளர்களின் உரிமைகள் ,நலன் மற்றும் உரிய வேலை நேரங்களை ஆதரிக்கிறது இந்த மே தினம்.
எட்டு மணி நேர வேலை நாளுக்காக நடந்த போராட்டங்களை நினைவு கூறும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இந்த நாள் .1889 இல் பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில் 8 மணி நேர வேலைக்காக போராடினர் .பின்பு 18 90 இல் பல நாடுகளில் மே 1 அன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டது.
வரலாறு 1886:
1886 இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த ஹே மார்க் கட் கிளர்ச்சி மிகவும் முக்கியமானது. தொழிலாளர்கள் குறைந்தபட்ச வேலை நேரத்திற்காக போராடினர். இதில் பலர் உயிரிழந்ததும், உலகளாவிய தொழிலாளர் இயக்கத்திற்கு தூண்டுகோல் ஆனது. இந்தியாவில் முதன்முறையாக தொழிலாளர் தினம் 1923ல் சென்னையில் (முன்பு மதராஸ்) கொண்டாடப்பட்டது. இதற்கு முக்கிய பங்கு வகித்தவர் சிங்காரவேலர் ஆவார்.
சிறப்புக்கள்:

*தொழிலாளர்களின் உரிமைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நாளாகவும் இந்த மே தினம் விளங்குகிறது.
மே தினம் தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு நாளாகவும் உள்ளது. "உழைப்பின்றி அமையாது உலகு "நல்ல வாழ்க்கை வாழ பெரும் உழைப்பை தியாகம் செய்ய வேண்டி உள்ளது .தொழிலாளர்கள் வர்க்கம் ஓடாக தேய்ந்து மாடு போல் கடும் உழைப்பு போட்டாலும் அவர்களுக்கு பலன்கள் என்று பார்த்தால் சிறிதளவு தான். அவர்களின் முதலாளிகளுக்கு பலன் முழுதும் போய் சேர்கிறது. அப்படிப்பட்ட உழைப்பாளிகளின் தியாகத்தை போற்றவும் அவர்களுடைய உரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்பட இந்த மே ஒன்று தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் உறக்கம், எட்டு மணி நேரம் ஓய்வு (விளையாடுவது, படிப்பது, பிற வேலைகள்) என இருந்தால்தான் மனித வாழ்க்கைக்கு அர்த்தமாக இருக்கும் என்று முன் வைத்தவர் காரல் மார்க்ஸ் .
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்:
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது :-எந்த வேலையும் அற்பமானது அல்ல; மனிதகுலத்தை உயர்த்தும் அனைத்து உழைப்பிற்கும் கண்ணியம் உண்டு; அவை சிறப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல; வருடம் முழுவதும் நினைத்து பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தொழிலாளர் சிந்திய வியர்வைத் துளி தான் கல்லாய் கடந்த பூமி பந்து கர்ப்பம் தரித்து உயிர் பிடித்திருக்கிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.
வியர்வை சிந்தும் தொழிலாளி கரங்கள் உயரட்டும் ;நாளைய உலகை வலிமையோடு ஆளட்டும்.
வீட்டை உயர்த்திட ;நாட்டை வளர்த்திட ;நாளை உருவாக, இன்றும் உழைத்திடும் உன்னத கரங்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.
கல் உடைக்கும் கரங்கள்; வெயிலில் உழைப்பவர்கள் முதல் கணினி வேலை செய்யும் குளிர்சாதன அறைக்குள் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.தென் தமிழ் சார்பாக அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}