- சங்கமித்திரை
சென்னை: மாதுரியா தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம்தான் இந்த கிரைம் தப்பில்ல. பெண்களைச் சுழற்றியடிக்கும் பாலியல் கொடுமைகள் தொடர்பான கதைதான் இது. ஆனால் படத்தில் ஆபாசமோ, வன்முறையோ இருக்காது என்று இயக்குநர் தேவகுமார் உறுதியாக கூறுகிறார்.
ஆடுகளம் நரேன் நடிப்பில் உருவாகியுள்ளது இந்த கிரைம் தப்பில்ல. இப்படத்தில் பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில், மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்துள்ளார்.

தேவககுமார் மலையாளத்தில் சிக்னல் என்ற படத்தை இயக்கியவர். இப்போது இந்த கிரைம் தப்பில்ல மூலம் தமிழுக்கு வந்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைவதாக இல்லை. என்னதான் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் கூட, பல்வேறு என்கவுண்டர்கள் நடந்துள்ள போதிலும் கூட பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு முடிவு கிடைத்தபாடில்லை. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை வைத்துத்தான் இந்தப் படம் உருவாகியிருக்கிறதாம்.

அனைவரும் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்றும் ஆபாசமோ, வன்முறையோ இதில் துளியும் இருக்காது என்று இயக்குநர் தேவகுமார் உறுதிபடத் தெரிவிக்கிறார்.

படத்தில் கதை நாயகனாக ஆடுகளம் நரேன் வருகிறார். மேக்னா ஏலனுக்கும் முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்குத் தேவையான கருத்தை இந்தப் படம் சுமந்து வருவதாகவும் இயக்குநர் தேவக்குமார் கூறியுள்ளார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}