- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 20 25 நவம்பர் மாதம் ஐந்தாம் நாள் புதன்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியும் பரணி நட்சத்திரமும் இணையும் சமயத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. சிவபெருமானின் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் மேலும் தலைமுறைக்கு அன்னம் குறைவில்லாமல் இருக்கும் என்பது ஐதீகம்.
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு அன்னப் பருக்கையிலும் சிவபெருமான் இருப்பதாக ஐதீகம்.அதனால் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தால் ஒரு கோடி சிவலிங்கங்களை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும். ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவாலயங்களில் சமைத்த உணவு, காய்கறிகள், பழங்களால் அபிஷேகமும், அலங்காரமும் சிவபெருமானுக்கு நடைபெறு கிறது.
அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம் :

ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தான் சாபம் பெற்ற சந்திரனுக்கு சிவபெருமான் சாப நிவர்த்தி அளித்தார். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னதானம் செய்வதற்கு சிறப்பான நட்சத்திரம் என்பதால்,ஒரு சில கோவில்களில் அஸ்வினி நட்சத்திரம் வரும் பொழுது அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
பொதுவாக பௌர்ணமி திதியில் அன்னாபிஷேகம் நடைபெறும் என்பதனால் பௌர்ணமி திதி புதன்கிழமை நவம்பர் 5ஆம் தேதி மாலை வரை இருப்பதனால் செவ்வாய் அன்று அபிஷேகம் செய்தாலும், நவம்பர் 5ஆம் நாள் முழுவதும் அன்னாபிஷேகம் அலங்காரம் பெரும்பாலான கோவில்களில் கலையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானின் அன்னாபிஷேக தரிசனம் கோடி புண்ணியம் என்பதனாலே "சோறு கண்ட இடம் சொர்க்கம்" எனும் பழமொழி உருவானது. சர்வ சிவாலயங்களில் சிவபெருமானுக்கு வடித்த அன்னத்தாலும், காய்கறிகளாலும் செய்திருக்கும்
அலங்கா ரத்தை காண்பதே கண்கொள்ளாக் காட்சியாகும். அதுவே பெரும் சொர்க்கம் ஆகும்.
இந்த நாளில் சுத்தமான பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை நன்றாக ஆற வைத்து, பிறகு அந்த அன்னத்தை சிவபெருமானின் லிங்கத் திருமேனி முழுவதும் சாற்றி , காய்கறிகள், பழங்கள் கொண்டு அலங்காரம் செய்வார்கள். புராணங் களும் சிவபெருமான் உலக உயிர்கள் அனைத்திற்கும் படி அளந்த தினமாக இந்த நாளை குறிப்பிடுகின்றன. சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நிகழ்வு என்பது அனைத்து பொருள்களிலும், ஒவ்வொரு அரசியலும் சிவபெருமான் பரப்பிரமமாக நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இதனை "மகா அன்னாபிஷேகம்" என்று அழைப்பார்கள்.
சிவபெருமானின் அன்னாபிஷேக அலங்காரத்தில் தரிசனம் செய்தால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி, நல் வாழ்க்கை அமையும், முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் இன்று திருமண நாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}