அன்பு.. எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது!

Jun 15, 2026,03:05 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்

வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத போது தான் கண்ணீராக வெளிப்படுகிறது உண்மையான அன்பு.

எல்லோரிடமும் சிரித்து பேசலாம் ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடம் மட்டும்தான் அழுது பேச முடியும்

--

சிலர் மேல் கொண்ட அன்பில் எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது அதுவே எல்லை மீறிய அன்பு

--

உண்மையான அன்பு எவ்வளவு பெரிய தவறையும் மன்னிக்கும். பொய்யான அன்பு விட்டு செல்ல காரணத்தை மட்டுமே தேடும்

--

உண்மையான அன்பு விலை போவதுமில்லை. விலை பேசுவதும் இல்லை.

விளக்கம் அளித்து விளக்கம் அளித்து அன்பை வாங்கவும் கூடாது அன்பை கொடுக்கவும் கூடாது.

--

புலிகள் வாழும் காட்டில் தான் புள்ளி மான்களும் வாழ்கின்றன பாம்பு வாழ்கின்ற கிணற்றில் தான் தவளைகளும் வாழ்கின்றன. ஆகவே துரோகிகளோடு வாழ்வதுதான் வாழ்க்கை.


சிலர் அன்பை வார்த்தைகளால் உணர்த்தலாம். சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம். ஆனால் சிலர் அன்பு புரியாது அதை காலம் உணர்த்தும்போது தான் கண்கள் கலங்கும்


--


உறவுகள் நம்மை நிராகரித்தால், அதைக் கண்டு அச்சப்பட வேண்டாம். இறைவன் நமக்கான நல்ல வழியை காட்டுகிறான் என்று வேறு வழியில் செல்ல வேண்டும். பூக்கள் பூக்க மறுப்பதால் வசந்த காலம் இல்லையென்று ஆகிவிடாது.

--

பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும். மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது.

--

அன்பு ஒருபோதும் மாறியதில்லை. அதை கொடுப்பவர்கள் தான் அடிக்கடி மனம் மாறி விடுகிறார்கள்

(இரா.மும்தாஜ் பேகம், ஆசிரியர், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்