விசிகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு முக்கியப் பதவி.. விஜய் அறிவிப்பு

Jan 31, 2025,06:53 PM IST

சென்னை: த.வெ.க.வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் ஆதவ் அர்ஜுனா. இந்த அறிவிப்பை கட்சித் தலைவர் விஜய் இன்று மாலை அறிவித்தார்.


தமிழ் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து ஏகோபித்த மக்களின் ஆதரவை பெற்றவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்போது தான் படம் நடிப்பதை நிறுத்தி விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் நடிகர் விஜய் அறிவித்தார். கட்சி தொடங்கியதில் இருந்து கட்சியின் வளர்ச்சி பணிகளை ஒவ்வொன்றாக செய்து வந்தார் விஜய். 


கடந்த அக்டோபர் 27ம்  தேதி விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மக்கள் கூட்டம் ஒருபுரம் அதிகளவில் கூடி வரலாற்று சாதனை படைத்தது என்றால், மற்றொருபுரம் அந்த மாநாட்டில் விஜய் போியது அனைத்து தரப்பினர்களையும் வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். முதல் மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் மற்ற கட்சிகளிடையே விவதாதத்தை ஏற்படுத்தி வந்தது என்றே சொல்லலாம்.




நடிகர் விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவு பெற உள்ள நிலையில் அக்கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அக்கட்சி நிர்வாகிகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதே சமயத்தில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சிலைகளையும் தவெக தலைவர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதி திறந்து வைக்க இருக்கிறார். 


மற்றொரு பக்கம் தமிழக  சட்டப்பேரவை தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்கள்  நியமனம் தொடர்பாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். தேர்ந்தெடுக்கப்படும் மாவட்ட செயலாளர்களுக்கு சானிறிதழும், விஜய் உருவம் பொறித்த வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.


சமீபத்தில் விகடன் பிரசுரம் சார்பில் எல்லோருக்குமான அம்பேத்கர் புத்தகம் வெளியிடப்பட்டது. வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜூனாவால் தொகுக்கப்பட்ட இந்த நூலை விஜய் வெளியிட முதல் பிரதியை முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா அரசியல் வட்டாரத்தில் பேசு பெருளாக அமைந்தது. அது மட்டும் இன்றி ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.


ஆதவ் அர்ஜூனா - நிர்மல் குமாருக்கு முக்கியப் பதவிகள்


ஆதவ் அர்ஜூனா தற்போது த.வெ.க. பக்கம் வந்துள்ளார். கடந்த 29ம் தேதி ஆதவ் ஆர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்துடன் விஜய்யின் தவெக கட்சி ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. புதிய அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜூனாவை விஜய் சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள  விஜயின் வீட்டில் ஆதவ் அர்ஜுனா நேற்று விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றதாகவும் இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியானது.


இந்த நிலையில் இன்று பனையூர் அலுவலகம் வந்த ஆதவ் அர்ஜூனா முறைப்படி கட்சியில்  இணைந்தார். அதேபோல அதிமுக ஐடி விங் செயலாளராக இருந்து வந்த சிடிஆர் நிர்மல்குமாரும் விஜய் கட்சியில் இணைந்தார். இவர்களுக்கு தற்போது முக்கியப் பொறுப்புகளை விஜய் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.


தவெகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் விவரம் வருமாறு:


1. ஆதவ் அர்ஜுனா - தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் 

2. சிடிஆர் நிர்மல் குமார் - தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு துணை பொதுச்செயலாளர்

3. பி ஜெகதீஷ் - தலைமை கழக இணைப் பொருளாளர் 

4. எ ராஜ்மோகன் - கொள்கை பரப்பு செயலாளர்

5. லயோலா மணி என்கிற மணிகண்டன் -  கொள்கை பரப்பு இணைச் செயலாளர்

6. பேராசிரியர் ஏ சம்பத்குமார் - கொள்கை பரப்பு இணைச் செயலாளர்

7. கேத்ரின் பாண்டியன் - கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்.

8. வீர விக்னேஸ்வரன் - செய்தி தொடர்பாளர் 

9. எஸ் ரமேஷ் - இணை செய்தி தொடர்பாளர் 

10. ஜெயபிரகாஷ் - தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் 

11. குரு சரண் - தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் 

12. ஆர் ஜே ரஞ்சன் குமார் - தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

13. ஆர் குருமூர்த்தி - சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் 

14. ராம் குமார் - சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்.

15. பி. வெங்கடேஷ் - சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

16. ஆர் நிரேஷ் குமார் - சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் 

17. எஸ் அறிவானந்தம் - சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் 

18. பி விஷ்ணு - சமூக ஊடக பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் 

19. குளோரியா ஹிமாகுலேட் - சமூக ஊடக பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்