சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களமும், கலாச்சாரமும் தினமும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக.,வில் இருந்து பலரும் விலகி ஆளும் கட்சியான தவெக.,வில் சென்று இணைந்து வந்தனர். ஆனால் தற்போது காங்கிரஸ், பாஜக.,வை சேர்ந்த பலரும் தவெக பக்கம் சென்று இணைந்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 4 எம்எல்ஏ.,க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அதிமுக.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இணைந்தனர். இந்நிலையில் இன்று காலை பாஜக., முன்னாள் எம்எல்ஏ விஜ யதாரணி தவெக.,வில் சென்று இணைய போவதாக தகவல் வெளியானது. ஆனால் பாஜக மட்டுமல்ல அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்தும் விலகி பலர் தவெக.,வில் சென்று இணைந்துள்ளனர்.
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த நிகழ்வு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், அமைச்சர்கள் பலரும் கலந்த கொண்ட பெரும் நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. பல்வேறு கட்சிகளில் இருந்து விலகும் பலரும் நேராக தவெக.,வில் சென்று இணைந்து வருகிறார்கள். ஆளும் கட்சி என்பதால் தங்களுக்கும் அங்கு ஏதாவது பதவி அல்லது பொறுப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பில் பலரும் சேர்ந்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசியலில் தவெக.,வின் பலம் அதிகரித்து வருவதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் நன்கு கவனித்து பார்த்தால் இது தவெக.,வை பலவீனப்படுத்தும் ஒரு அரசியல் வியூகம் ஆகும்.

தவெக மட்டுமின்றி எந்த ஒரு கட்சியிலும் அந்தந்த மாவட்டம் அல்லது பகுதிக்கான நிர்வாகிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு கட்சியில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டு இருக்கும். தற்போது அதே பகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர் வந்து இணைவதால், அவர்களுக்கும் ஏதாவது பொறுப்பு வழங்க வேண்டிய கட்டாயம், நெருக்கடி தவெக.,விற்கு ஏற்படும்.
புதியவர்களுக்கு பொறுப்பு கொடுத்தால், அது ஏற்கனவே கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். இதனால் கட்சிக்குள் ஒற்றுமை குறைந்து, குழப்பம் அதிகரிக்க துவங்கும். இதன் விளைவாக கட்சி பணிகளோ, தேர்தல் பணிகளோ சரியாக நடக்காது. இது தவெக.,வை மெல்ல மெல்ல பலவீனப்படுத்தும்.
தவெகவின் பெரும் பலமே முதல்வர் விஜய் மட்டும்தான். அந்த முகத்துக்காகத்தான் 108 இடங்களைக் கொடுத்துள்ளனர் தமிழ்நாட்டு மக்கள். இந்த நிலையில் பிற கட்சியினர் தவெகவில் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் தேர்தல் சீட் தருவது, பதவிகளைத் தருவது ஆகியவற்றில் பெரும் சிக்கல் வரும் என்று சொல்கிறார்கள்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}