சென்னை: அதிமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு வழங்குதல் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த விருப்ப மனுவை இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், ஆலோசனை மேற்கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதே முனைப்புடன் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையமும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதிமுகவுடன் சில கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தேர்தல் குழு, பிரச்சார குழு, விளம்பர குழு, உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விருப்ப மனுக்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் சீட் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். அதேபோல பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் விருப்ப மனுவை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}