- J லீலாவதி
அன்புக் குழந்தையே
உன் காலடி சத்தம் கேட்கவே
உன் கால்களுக்கு ஒரு சலங்கை
என் இரண்டு கைகளை நீட்டி
வா என்றதும் என் கைக்குள் நீ
ஆயிரம் கவலைகள் என்னுள் இருந்த போதும்
உன் முகத்தைப் பார்த்த எல்லாம் நாட்களும்
கவலை இல்லாத நாட்களே
என்னுலகம் நீ என்று
என்னை நம்பி வந்தாய்

மாறிவிட்டேன் மாற்றி விட்டேன்
என்னை உனக்காக
உன்னை சுமந்த நாள்
என் சுமையை இறக்கிய நாள்
பேசிய வார்த்தையில் நிதானமானேன்
நீ நல் வார்த்தையை கற்றுக்கொள்ள
பெரியோரை மதித்தேன்
நீயும் மதிப்பாய் என்று
நல் நூல் பல கற்றேன்
உனக்கு போதிப்பதற்காக
ஆலயம் பல சென்றேன்
ஆன்மீகம் பல நீ கற்க
அன்புக் குழந்தையே
என்னை நம்பி வந்தாய்
இனி எல்லாமும் நானே.
நான் நல்வழியில் நடக்க
என்னை பின் தொடரும் நீயும் நல்வழியில் வா
கெட்ட வார்த்தை ஒன்று உண்டோ
இல்லை
நீ கேட்ட வார்த்தையை மட்டும் தான் பேசுகிறாய்.
ஆதலால் உன்னை வளர்க்க
நான் மாறிவிட்டேன் - மாற்றி விட்டேன்.
இந்த மண்ணில் வந்த நீ
வாழ்வாங்கு வாழ்ந்து
பல நூல்களை கற்று
பதினாறு பேரும் பெற்று வாழ்வாயாக.
என் ஆசை நிறைவேற்றுவாய்
(J லீலாவதி திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)
ஆருத்ரா தரிசனம் எப்ப வருது தெரியுமா.. அதோட முக்கியத்துவம் என்னன்னு தெரியுமா?
சீனாவின் மகா மதில்.. உலக அதிசயங்கள் (தொடர்)
முதல்ல என்னை நான் பார்த்துக்கறேன்.. The promises make to my own soul
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
நீ பார்த்த பார்வை.. When I looked into your eyes!
ஒரே நாளில் உருவானதல்ல.. ரோம சாம்ராஜ்ஜியம்.. ROME WASN'T BUILT IN A DAY
Vaikunda Ekadashi: சொர்க்கவாசல் நாயகனே.. கோவிந்தா கோவிந்தா!
{{comments.comment}}