சென்னை: தளபதி விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 4ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' படத்திற்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி, தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் ஜனவரி 4, 2026 (ஞாயிற்றுக்கிழமை) முதல் டிக்கெட் முன்பதிவு முழுவீச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 9 அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கான முன்பதிவு, முக்கிய நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஜனவரி 4-ம் தேதி காலை முதல் தொடங்க வாய்ப்புள்ளது. BookMyShow மற்றும் TicketNew போன்ற தளங்களில் ஜனவரி 4-ம் தேதி முதல் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஏற்கனவே சில வெளிநாடுகளில் (USA, UK, UAE) முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் இப்படம் வெளியாகிறது. தளபதியின் கடைசிப் படம் என்பதால், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்குக் கூடுதல் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது. ஜனவரி 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும் (Sold Out) என எதிர்பார்க்கப்படுகிறது.
In the Books of Life
Don't search for yourself, Create yourself
விலங்கொடித்த விடிவெள்ளி!
தென்னை போல நெடு நெடுன்னு வளர்ந்திருக்கும் தேவதையே!
ஒரு குட்டிக் கதை.. வெள்ளி கொலுசு மணி!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!
{{comments.comment}}