சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது பெயரில் இருந்து தந்தையின் இன்ஷியலான ‘V’ என்ற எழுத்தை நீக்கிவிட்டு, தாய் சங்கீதா பெயரைக் குறிக்கும் ‘S’ என்ற எழுத்தைச் சேர்த்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொதுவாக தமிழ் கலாச்சாரத்தில் பிள்ளைகள் தங்கள் தந்தையின் பெயரின் முதல் எழுத்தை (Initial) பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ஜேசன் சஞ்சய் இதுவரை ‘Jason Sanjay V’ என்றே தனது பெயரை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி வந்தார். ஆனால், தற்போது அவர் தனது பெயரை ‘Jason Sanjay S’ என மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ‘S’ என்பது அவரது தாய் சங்கீதா சொர்ணலிங்கம் பெயரைக் குறிப்பதாகத் தெரிகிறது.
குடும்பப் பிரச்சனை காரணமா?

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் விவாகரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. குறிப்பாக, நடிகை திரிஷாவுடன் விஜய்யை இணைத்து வெளிவரும் கிசுகிசுக்களே இந்த விரிசலுக்குக் காரணம் என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், தனது தாய்க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே ஜேசன் சஞ்சய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய்யை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'அன்ஃபாலோ' (Unfollow) செய்ததாக ஒரு தகவல் வெளியானது. அதுவே ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது பெயர் மாற்றமும் சேர்ந்து பேசு பொருளாகியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விஜய் தரப்பிலிருந்தோ அல்லது ஜேசன் சஞ்சய் தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஜேசன் சஞ்சய்யின் திரையுலகப் பயணம்:
விஜய்யின் வாரிசாகத் திரையில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் சஞ்சய், கேமராவுக்குப் பின்னால் இயக்குநராகப் பணியாற்றவே ஆர்வம் காட்டினார். தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் இயக்குநராக ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
துணை ஜனாதிபதி சொன்ன அந்த "தமிழ் பிரதமர்" யாராக இருக்கும்? - அதிகரிக்கும் சுவாரஸ்யம்!
ஒரு ஆசிரியராக பள்ளியில் காலடி எடுத்து வைத்தபோது!
பளிங்கர்கள்.. ஜோ இது உனக்கு தேவையா??!
நாளை நமக்கான நாளாகும் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (10)
ஓய்வு.. ஒரு நிமிடக் கதை (50)
உங்க ஏரியாவுல எப்ப மழை பெய்யும்.. துணி காயப் போடலாமா?.. இப்படியும் ஒரு சைட் இருக்குங்க!
தென்தமிழ் தலையங்கம்: தமிழ்நாடு என்னும் பேரடையாளம் - தியாகமும் பெருமையும் சங்கமிக்கும் திருநாள்!
நான் கண்ட (சொர்க்கம்) இமயம்!
கதவுக்கு அப்பால் மறைந்திருக்கும் ரகசியம்.. அவள் யாரென்று தெரியுமா? (3)
{{comments.comment}}