முன்னாடி எல்லாம் தங்கம் ஒரு முதலீடுன்னு சொல்லுவாங்க... ஆனா இப்போ இருக்குற விலையைப் பார்த்தா தங்கம் ஒரு அதிசயம் மாதிரி ஆயிடுச்சு! நகைக்கடைக்கு நகை வாங்க போறவங்களை விட, சும்மா ஏசி காத்துக்காக ஓசியில வேடிக்கை பார்க்கப் போறவங்க தான் அதிகமா இருக்காங்க.
பவுன் விலை ராக்கெட்ல போயிட்டு இருக்கிற இந்த நேரத்துல, நம்ம பர்ஸ் காலியானாலும் பரவாயில்லை... நம்ம சிரிப்பு குறையக்கூடாது.. அட ஆமாங்க.. இதோ, தங்கம் விலை உயர்வை வச்சு உங்களுக்காக சில ஜாலியான கலகல ஜோக்ஸைக் கொண்டு வந்திருக்கோம். படிச்சுட்டு நல்லா சிரிங்க.. அதுக்குப் பிறகு நகைக் கடைக்கு போலாமா இல்லை வேண்டாமானு யோசிச்சு முடிவெடுங்க.
போலீஸ்: ஏப்பா, தங்கத்தைக் கடத்திட்டு போறதா தகவல் வந்திருக்கு, உன்னை அரெஸ்ட் பண்றோம்!
வாலிபர்: ஐயோ சார், அது தங்கம் இல்லை... என் பொண்டாட்டி! அவ பேரு தான் தங்கம்.

பெண்: சார், எங்க குடும்பத்துக்குப் போலீஸ் பாதுகாப்பு வேணும்.
போலீஸ்: ஏன்மா? யாருக்காவது கொலை மிரட்டலா?
பெண்: இல்ல சார், எங்க அப்பா பேரு தங்கமுத்து, அம்மா பேரு தங்கமாரி, என் பேரு தங்கமீனா, என் தம்பி பேரு தங்கபாண்டி... தங்கம் விலை ஏறுறதை பார்த்தா எங்களை யாராவது கடத்திருவாங்களோன்னு பயமா இருக்கு!
நண்பன் 1: டேய், தங்கம் விலையை குறைக்க ஒரு சூப்பர் ஐடியா இருக்கு.
நண்பன் 2: என்னடா?
நண்பன் 1: முன்னாடி சிக்கன் சாப்பிட்டா பறவைக் காய்ச்சல் வரும்னு வதந்தி பரப்பி விலையை குறைச்சாங்கல்ல... அதே மாதிரி தங்கம் போட்டா தங்கக் காய்ச்சல் வரும்னு ஒரு வதந்தியைப் பரப்பி விட்டுட்டா, விலை பாதியா குறைஞ்சிரும்ல!"
மாமா, உங்க பொண்ணுக்கு கல்யாணத்துக்கு 100 பவுன் நகை போடுறதா சொன்னீங்களே?
மாமனார்: ஆமா மாப்ளை... ஆனா அப்போ தங்கம் விலை 2000 ரூபாய். இப்போ இருக்கிற விலைக்கு 100 பவுன் போட்டா, உன்னை மாப்பிள்ளையா வச்சுக்கிறதை விட உனக்கு பதிலா ஒரு நகைக்கடையவே விலைக்கு வாங்கிடலாம் போலயே!
நபர் 1: என்னப்பா, உன் போன்ல கூகுள் மேப் போட்டு எங்கேயோ தேடிட்டு இருக்க?
நபர் 2: இல்லப்பா, போன வாரம் ஒரு கல்யாணத்துக்குப் போனப்போ தெரியாம ஒரு 'தங்க' ஸ்பூன்ல ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். அதுல ஒரு சின்ன துகள் கீழ விழுந்துடுச்சு... அது இப்போதைய விலைக்கு ஒரு ரெண்டு லட்சம் தேறும். அதான் ஜி.பி.எஸ் வச்சு தேடிட்டு இருக்கேன்!
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}