என்னது கமலின் KH 233 படம் கைவிடப்படுகிறதா? ஏன்... என்ன காரணம்?

Jan 11, 2024,10:27 AM IST

சென்னை : டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க இருந்த KH 233 படம் கைவிடப்படுவதாக கோலிவுட்டில் தகவல் ஒன்ற தீயாய் பரவி வருகிறது. இதற்கு என்ன காரணம் என பலரும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.


விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் வரிசையாக கமிட்டாக நடித்து வருகிறார் கமல்ஹாசன். அப்படி அவர் கைவசம் இருக்கும் படங்களில் ஒன்று தான் KH 233. டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கமல் - ஹச்.வினோத் காம்போ முதல்முறையாக இணையும் KH 233 படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இந்த படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.


படத்தின் வேலைகள் துவங்குவதற்கு முன்பே இந்த படம் எதற்காக கைவிடப்பட்டது, என்ன காரணம் என விசாரித்த போது, வினோத் கமலுக்காக கதை ஒன்றை தயார் செய்து அவரிடம் கதை சொல்லி உள்ளார். அது போலீஸ் கதையாம். ஆனால் கமலுக்கு அந்த கதை பிடிக்கவில்லையாம். தான் பல படங்களில் போலீஸ் ரோலில் நடித்து விட்டதாக சொல்லி விட்டாராம். இதனால் வேறு வழியில்லாமல் KH 233 படத்தை மறந்து விட்டு, அடுத்த படத்திற்கான வேலையை பார்க்கலாம் என வினோத் முடிவு செய்த விட்டாராம்.




அடுத்ததாக மீண்டும் கார்த்திகை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் அடுத்த பாகத்தை இயக்க வினோத் திட்டமிட்டிருக்கிறாராம். இந்த படத்திற்கு தீரன் 2 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  


அதே சமயம் KH 233 கைவிடப்பட்டதாக வெளியான தகவல் அனைத்தும் வெறு வதந்தி தான். அந்த படம் கைவிடப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் மற்றொரு தகவல் சொல்லப்படுகிறது. அதாவது கமல் தற்போது டைரக்டர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள், பிக்பாஸ் சீசன் 7 பைனல் ஆகியவற்றின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறாராம். இவற்றை முடித்த பிறகு பாலிவுட்டில் பிரபாசிற்கு வில்லனாக நடிக்கும் கல்கி 2898 AD, மணிரத்னம் இயக்கும் thung life ஆகிய படங்களில் கமல் நடிக்க போகிறாராம். வரிசையாக படங்களில் கமிட்டாகி இருப்பதால் KH 233 தற்போதைக்கு ஒத்திவைக்கப்படுகிறதாம். 


தற்போது கைவசம் இயக்கும் படங்களை கமல் முடித்த பிறகு, KH 233 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம். இந்த படம் ராணுவத்தை பின்புலமாக கொண்ட கதையாம். கமல் கைவசம் இருக்கும் படங்களை முடிப்பதற்குள், வினோத்தும், தீரன் 2 படத்தை முடித்து விடுவாராம். அதற்கு பிறகு KH 233 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றில் எது உண்மை என தெரியாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்