சென்னை : கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 படத்துடன் சேர்த்து இந்தியன் 3 படத்தையும் தயார் செய்து முடித்து விட்டார் டைரக்டர் ஷங்கர். இரண்டு பாகங்களின் ஷூட்டிங்கும் ஏறக்குறைய முடிந்து விட்டதாம்.
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்த இந்தியன் படம் 1996ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக 2019ம் ஆண்டு இந்தியன் 2 படம் துவங்கப்பட்டது. ஆனால் கொரோனா, வழக்கு உள்ளிட்ட பல விதமான பிரச்சனைகளால் படம் தொடர்ந்து தள்ளிப்போனது.
ஒரு வழியாக தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களாக சென்னையில் இந்தியன் 2 ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், லேட்டஸ்ட் தகவலின் படி இந்தியன் 2 மட்டுமல்ல, இந்தியன் 3 படத்திலும் தன்னுடைய போர்ஷன்களை முழுவதுமாக நடித்து முடித்து விட்டாராம் கமல். படக்குழுவினருடன் கமல் எடுத்துக் கொண்ட போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
\

இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் தான் மீதம் உள்ளதாம். விரைவில் இதையும் படமாக்க போகிறார்களாம். இந்தியன் 2 மற்றும் இந்திய 3 படத்தின் ஒட்டுமொத்த தயாரிப்பு பணிகளும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளதாம். இதற்கிடையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இறுதி வாரம், ஃபினாலே ஆகியவற்றின் ஷூட்டிங்கையும் கமல் ஒரு வாரத்திற்குள் முடிக்க போகிறாராம். அதற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் வேலையை கமல்ஹாசன் துவங்க போகிறாராம்.
ஜனவரி மாத கடைசி அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் சென்னையில் துர் லைஃப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாம். அதை முடித்த பிறகு ஹச்.வினோத் இயக்கும் கமல்ஹாசன் 233 படத்தில் நடிப்பதற்காக கமல் தயாராக போகிறார். விறுப்பாக விறுப்பாக அடுத்தடுத்த படங்களில் கமல் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் அவர் நடித்த படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

இந்தியன் 2 படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையிலும், இந்தியன் 3 படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்த இரண்டு பாகங்களுமே நிச்சயம் மிகப் பெரிய வசூல் சாதனையை இந்த ஆண்டு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}