பாரதி என் தோழன்

Oct 12, 2026,10:59 AM IST

- காஞ்சி கிருபா


எட்டையபுரத்துக்கவிஞனே

என் உள்ளம் நுழைந்தவனே

உன் இல்லம் தேடி வருகிறேன்..


ஆளுக்கொரு 

கோப்பைத் தேநீர் பருகி 

அன்பு பேசி மகிழ்வோம் 


உன் பேனாவை 

எடுத்துக்காட்டு 

முத்தமிட்டுக் கொள்கிறேன் 




வீரமிக்க புருவங்களை

உயர்த்திக்காட்டு

அனலேற்றிக் கொள்கிறேன்..


தோள் கொடுக்கும் தோழனே

உன் முண்டாசை கொஞ்சம் தா

போட்டுப் பார்க்கிறேன்!! 


வானமிடித்த

விடுதலை வேட்கை

கவிதைகள் காட்டு

ஒற்றிக் கொள்கிறேன் 


சாதிகள் வேண்டாமென 

சம்மட்டியால் அடித்தெழுதிய..

வரிகள் காட்டு 

வணங்கிக் கொள்கிறேன்...


வீட்டுக்கு வந்தவனை

வெறுங்கையோடு 

அனுப்பாதே தோழனே

பாஞ்சாலி சபதம் 

கண்ணன் பாட்டு 

குயில் பாட்டு 

கொடுத்தனுப்பு 

எடுத்துச் செல்கிறேன் 


இன்னொரு தேநீர் 

தா தோழனே

பருகி செல்கிறேன் 

காஞ்சி பேருந்து 

வந்து விடும் .....


(ஜோ. கிருபானந்தம் என்கிற காஞ்சி கிருபா, 25 ஆண்டுகளாக முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார்.  பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், சிறுகதை கவிதை கட்டுரை படைப்பாளர். விஜய் டிவி கலக்கப்போவது யாரு பார்ட் 2 நிகழ்வில் பங்கு பெற்று காமெடி கிங் விருது, சன் டிவி அசத்தப்போவது யாரு நிகழ்வில் பங்கேற்று அசத்தல் மன்னன் விருது பெற்றுள்ளேன். பல குரல் மன்னன், மேடைப் பாடகர், கிராமிய பாடல் நடன கலைஞன். இந்து தமிழ் திசை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் அன்பாசிரியர் விருது  பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்...2100-க்குள் மனித இனம் அழியும் அபாயம்: 'தி லான்செட்' எச்சரிக்கை

news

பலருக்கு வரலாறு மட்டுமே.. உங்களுக்கு வசீகரமும் இருக்கு.. சிலாகித்த வைரமுத்து..சொல்லிப் பார்த்த ரஜினி

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

news

Spiritual Tour: சென்னை to ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 1)

news

பாரதி என் தோழன்

news

எது சகோதரத்துவம்?

news

"நீ பூஜைக்கு ஏற்ற புஷ்பமா? நான் தான் உனக்கு இஷ்டமா?

news

தென்தமிழ் தலையங்கம்: கரீபியனில் தொடங்கிய அமெரிக்கக் கதை.. கொலம்பஸ் தினம்!

news

"டிரம்ப் பெருங்கடல்" : பெருங்கடல்களின் பெயரை மாற்ற டொனால்ட் டிரம்ப் புதிய திட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்